உலகப்புகழ் யாருக்கு கிடைக்கும் JK - horoscope
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்பது திருக்குறள்
மனிதனாகப் பிறந்த அனைவருமே புகழ் பெற வேண்டும், என்ற நோக்கம் மனம் நிறைய இருக்கும். ஒரு சிலர் பிறந்து, வாழ்ந்து, மறைந்தது யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. ஆனால், வெகு சிலருடைய வாழ்க்கையோ அவர்கள் காலத்திற்குப் பின்னும் பல காலம் நினைவில் கொள்ளப்படுகிறது. அதை நேர்மையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும், எடுத்துக்காட்டாக ஹிட்லரை எடுத்துக்கொள்வோம். எதிர்மறையான புகழுக்கு இவரை விட மிகச் சரியான உதாரணம் எதுவும் தேவையில்லை. நேர்மறையான புகழுக்கு மகாத்மா காந்தி, அன்னை தெரசா, போன்ற பலரை உதாரணம் காட்டலாம். இவர்கள் புகழை தேடி போகவில்லை! புகழ் இவர்களை தேடி வந்தது. ஆனால் ஈதல் இசைபட வாழ்தல் என்பதற்கிணங்க இன்னாருக்கு தான் புகழ் கிடைக்கும், பெயர் கிடைக்கும், என்று ஜாதகத்தை பார்த்து அறுதியிட்டுக் கூற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். புகழ் என்பது அந்த ஜாதகரின் பெயரையும், தோற்றத்தையும், வெளிக்கொண்டு வருவது. இவை இரண்டையும் குறிப்பது இலக்கணமாகும்.
ஒரு ஜாதகத்தில் லக்கினம் பாபர் பார்வையில்லாமல் லக்கினாதிபதி பலம் பெற்ற நிலையில், சுபர் பார்வையோடு இருந்தாள், அவர்கள் நிச்சயமாக புகழ் பெறுவார்கள். ஆனால் அவர்களுடைய சரியான வயது காலங்களில் அதற்கேற்ற திசையும் நடக்க வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெறும் எப்படி ஒரு சமையலறையில் எல்லா பொருள்களும் இருந்தாலும், நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் நாம் செய்கிறோம். மாவு இருக்கிறது என்பதற்காக பகல் 12 மணிக்கும், ஒரு மணிக்கும், இட்லி சுடுவதில்லை. அதேபோன்று என்னதான் யோக பாக்கியம் ஒரு ஜாதகத்தில் இருந்தாலும், அதற்கேற்ற தசையும், புத்தியும், அந்த வயது காலங்களில் நடக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் திரு எம்ஜிஆர் அவர்கள் ஜாதகத்தில், முப்பத்தி ஒரு வயதில் தான் அவர் முதல் திரைப்படத்திலேயே நடித்திருக்கிறார். அதற்கு பின்பு ஏற்பட்ட, பெயரும் புகழும் அவருடைய இறுதிக் காலத்திற்கு பின்னும் நிலைத்து நிற்கிறது. அவருக்கு சாதகமான தசை, 31 வயதில் தான் ஆரம்பித்தது. இது போன்று இல்லாமல், ஐம்பத்தொரு வயதிலும், 67 வயதிலும் திசை ஆரம்பிக்கிறது என்று, வைத்துக்கொள்வோம். அதனால் என்ன பிரயோஜனம் இருக்கும். அந்த கிரக அமைப்பு இருந்தும், ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும்.
புகழ் அடைவதற்கான கிரக அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை, வழக்கம்போல ஒரு எடுத்துக்காட்டு ஜாதகத்தைக் கொண்டு நாம் பார்க்கலாம்.
லக்கின அதிபதியான சனிபகவான், பத்தாம் பாவத்தில் உச்சம் பெற்று நிலையில் நிற்கிறார். எனவே, இயல்பாகவே ஆயுள் பலத்தை நன்றாக கொடுத்திருக்கும் அதுமட்டுமல்லாமல் இலக்கினாதிபதி, சிந்தனைகளை குறிக்கக்கூடிய கிரகம், அவர் சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்ற நிலையில் இருப்பது மாறுபட்ட சிந்தனைகள் கொண்டவர் என்பதை குறிக்கிறது. காரணம் சூரியனும், குருவும்கேதுவும், சனியைப் பார்க்கிறார்கள். வாக்கு ஸ்தானம் எனப்படும், இரண்டாம் இடத்தில் ராகு நிற்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராகுவுக்கு வீடு கொடுத்தவனும், கால் கொடுத்தவனும் ராகுவிற்கு திரிகோணத்தில் நிற்பதை கவனிக்கவும். இதனால்தான் இவருடைய பேச்சுக்களும், எழுத்துக்களும், இன்றளவும் புகழ் பெற்றவையாக தெரிகின்றன. லக்னாதிபதியான சனி, உச்சம் பெறுவது இவருக்கு உலகப்புகழ் பெற்ற மனிதராக ஆக்கியது. ஆமாம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனப்படும் ஜேகே ஜாதகம்தான் இது.
புத்தி ஸ்தானாதிபதி எனப்படும் 5ஆம் இடத்து அதிபதி, பரிவர்த்தனை யோகத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதும், ஆறாம் இடத்து அதிபதி 5ஆம் இடத்தில் வலுப்பெற்று இருக்கும் இந்த ஜாதகத்திற்கு, மாறுபட்ட சிந்தனைகளை மாறுபட்ட கோணங்களில் பார்க்கும் திறனை கொடுத்தது. ஒரு பிரச்சனையை சாதாரண மனிதன் அணுகுவதற்கும், இது போன்ற சான்றோர்கள் அணுகுவதற்கும், நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை தான் அவருடைய பேச்சுகளும், எழுத்துகளும் பிரதிபலிக்கின்றன.
லக்கினாதிபதி சனி உச்சம் பெற்ற நிலையில் நிற்பது, 5ஆம் இடத்து அதிபதியான சுக்கிரன், ஒன்பதாம் இடத்து அதிபதியான புதனும், பரிவர்த்தனை யோகம் பெற்று இருவருமே, ஆட்சி பெற்ற நிலையில் நிற்பது ஆகிய இந்த கிரக சேர்க்கைகள் புகழ்பெற்றவர் மட்டுமல்ல, இவரை உலக புகழ் பெற்றவராக மாற்றியது திரிகோணாதிபதிகள் எனப்படும். லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, மற்றும் பாக்கியாதிபதி வலுப்பெற்ற ஒரு ஜாதகம் நிச்சயமாக, வாழ்க்கையில் வெற்றி அடையும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
திருச்சிற்றம்பலம்!!!