"ராசிக்கட்டத்தில் ரகசியம்" 

ராசி கட்டம் என்பது அற்புதமான ஒரு கண்டுபிடிப்பு! உண்மையில் ராசி எனகட்டம் என்பது வட்டமாகத் தான் இருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்வதற்கு எளிமையாக சதுரமாக ஆக்கிக் கொடுத்துள்ளார்கள். நமது நாட்டிலேயே மூன்று விதமான ராசி சக்கரங்களின் வகைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக! வட இந்தியாவின் பகுதிகளில் ஜோதிடர்கள் உபயோகிப்பது டைமண்ட் போன்ற ராசிச் சக்கரம். நாம் படிக்கும் பொழுது எதைப் படிக்கிறோமோ அதுவே நமக்கு எளிதாக அமையும் என்பதற்கிணங்க  சதுரமான கட்டத்தில் நாம் உபயோகிக்கின்றோம்!

மேஷம் முதல் மீனம் வரை இருக்கின்ற 12 கட்டங்களில் என்ன விசேஷம் இருந்துவிடப் போகிறது. எந்த கிரகங்கள் எங்கே இருந்தாலும் ராசி சக்கரத்தில் எந்த லக்னம் என்பதைக் கொண்டே பல விஷயங்களை தீர்மானம் செய்து விடலாம். ஜோதிடத்தை மிக எளிமையாக தெரிந்து  கொள்வதற்கு முதலில் இராசிச் சக்கரத்தை புரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக்கூடங்களில் நமக்கு உலக வரைபடத்தை காட்டும் பொழுது முதலில் நாம் பார்ப்பது நமது நாடு எங்கே இருக்கிறது என்று தான். தொட்டில் பழக்கம் கடைசி வரை இருக்கும் என்பதற்கு இணங்க இப்பொழுது கூகுள் மேப்பை எடுத்தால் கூட நமது ஊர் எப்படி இருக்கிறது? என்று தான் நம்மை அறியாமலே பார்க்கச் சொல்லும் இதைத்தான் அறிவியல் ஜீன்வேலை செய்கிறது என்று கூறுகிறார்கள்! இராசி கட்டங்களைக் கொண்டு முதலில் நமது பிறந்த ராசி நமக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை பார்த்தாலே பலன் சொல்வது எப்படி என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

ராசி கட்டங்களில் பலவிதமான தொகுப்புகளை நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள், இவை அனைத்தும் பலன் சொல்லும் பொழுது மிகவும் உபயோகப்பட கூடிய விஷயம் ஆகும். ராசிச் சக்கரத்தில் இந்தப் பகுதிகளைப் பற்றி நாம் படிக்க ஆரம்பிக்கும் பொழுது நமக்கு தலையும் சக்கரத்தை விட வேகமாகச் சுற்ற ஆரம்பித்துவிடும்! ஒவ்வொரு ராசிக்கும் பலவிதமான சிறப்புகள் உள்ளன, இவற்றை எந்த அளவு அதிகமாக நாம் நினைவில் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு பலன் கூறும் திறமை வெளிப்படும். ஜோதிடத்தில் எல்லாவற்றிற்கும் ஆதார சுருதியாக இருப்பது இந்த இராசிச் சக்கரம் எந்த கிரகம் எங்கே இருக்கிறது? என்பதை குறிப்பதும் எந்த லக்கினத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் என்பதை குறிப்பதற்கும் ஒரு பிளாட்பார்ம் வேண்டும் அல்லவா? அதுதான் இந்த இராசிச் சக்கரம். 

ராசிச் சக்கரத்தை வைத்து எவற்றை கண்டுபிடிக்கலாம்? என்பதை பற்றிய விளக்க உரை நமது மொபைல் செயலியில் ஸ்பெஷல் வீடியோ பகுதியில் Astrology in Tamil என்ற போல்டரில் காணலாம் !

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக !!

திருச்சிற்றம்பலம் !!