வக்கிரம் + வக்கிரம்  என்ன செய்யும் ?

6ஆம் அதிபதி 7ஆம் இடத்தில் இருந்தால் என்ன செய்யும் ?

குடும்ப வாழ்க்கைக்கு ஏழாம் இடமும் இரண்டாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும் என்று அறியப்படுகிறது இரண்டாமிடம் குடும்பத்தை குறிக்கக்கூடியது ஏழாமிடம் வாழ்க்கை துணையை பற்றி பேசக் கூடியது இந்த இரண்டு வீடும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் அதே போல் இந்த இரண்டு வீட்டு அதிபதிகளும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் அப்போது தான் ஒருவருடைய குடும்ப வாழ்க்கை எந்நாளும்  ஹனிமூன் போன்றே செல்லும்

பொதுவாக ஒரு ஜாதகத்தில் 7ஆம் இடம் பாதிக்கப்படுவது என்பது பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படலாம் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான ஒரு அம்சம் ஆறாம் இடத்து அதிபதி ஏழாம் இடத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு என்று எடுத்துக்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக அவருடைய திசை  நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அதாவது ஆறாம் இடத்து அதிபதி ஏழாம் இடத்தில் நின்று தசை நடத்துகிறார் என்றால் அந்த திசையில் குடும்பத்தில் நிச்சயமாக பிரிவினை வந்துவிடும்

வக்கிர கிரகங்களைப் பற்றி நாம் பேசும் பொழுது இயல்புக்கு மாறான பலன்கள்  செய்யும் அதாவது சாதாரணமாக ஒரு கிரகம் என்ன செய்ய வேண்டுமோ அதற்கு நேர் எதிரான பலன்களை செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்று பல இடங்களில் எடுத்துக்காட்டுகளுடன் பார்த்துள்ளோம்

ஆறாம் இடத்து அதிபதி ஏழாம் இடத்தில் நின்றால் குடும்பம் பிரிந்து விடும் ஆனால் அவர் வக்கிரம் பெற்றிருந்தால் பிரிவினை இல்லாமல் சந்தோஷமாக குடும்பம் ஓடும் அல்லவா அதுதானே எதிர்மறையான பலன் ஆனால் வக்கிரம் பெற்றிருந்தால் கூட குடும்பம் பிரிவதும் உண்டு அது எப்படி என்பதைத்தான் நாம் இப்பொழுது ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கப்போகிறோம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை கவனிக்கவும் 

 

இது ஆண்  ஜாதகம் இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கூட மனைவி இவருடன் இல்லை உடனே விவகாரத்து பெற்று சென்று விட்டார்

இவர்கள் இருவரும் ஏன் விவகாரத்தை பெற்றார்கள் என்பதற்கு பல காரணங்களை இருவருமே சொல்வார்கள் அது சமுதாயத்திற்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம் ஆனால் ஜோதிட ரீதியாக ஏன் இருவரும் மணவிலக்கு பெற்றுக் கொண்டார்கள் ஏன் இவர்களால் தொடர்ந்து குடும்பம் ஓட்ட முடியவில்லை என்பதை காணலாம் 

 

இந்த ஜாதகத்தில் ஆறாம் இடத்து அதிபதியான புதன் ஏழாம் இடத்தில் வக்கிரம் பெற்று நிற்கின்றார் புதன் திசை புதன் புத்தி வந்தபொழுது இந்த ஜாதகருக்கு திருமணம் முடிந்துள்ளது ஆனால் உடனே அந்த திருமணமும் முடிவுக்கு வந்துவிட்டது ஆறாம் அதிபதி ஏழில் நின்று தசை நடத்தினால் குடும்ப பிரிவினை வரும் என்பது சரி என்றால் புதன் வக்ரமாகி நிக்கிறாரே அப்படியானால் குடும்பம் பிரிய கூடாது அல்லவா ஆனால் என் குடும்பம் பிரிந்தது இங்குதான் ஜோதிடத்தின் சூட்சமங்கள் ஒளிந்துள்ளன

 

புதன் வக்கிரம் பெற்று இருப்பதால் குடும்பத்தில் பிரிவினைகள் வரக்கூடாது சரி அவர் யாருடைய சாரம் பெற்று இருக்கிறார் என்று பாருங்கள் சனி சாரம் பெற்று இருப்பார் சனி பகவான் குடும்ப ஸ்தானாதிபதி மற்றும் லக்கினாதிபதி இவர் பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார் நல்ல ஸ்தானம் தான் எனவே குடும்பம் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் செல்ல வேண்டும் இதுவரை பலன் இடது சரி இங்கு சனி வக்ரம் பெற்று இருக்கிறார் அல்லவா எனவே அமைதியாகச் செல்லும் குடும்பத்தை ஆப்போசிட் திசை திருப்புங்கள் குடும்ப வாழ்க்கை நிம்மதியற்று போய்விடும் என்பது புலனாகும்

 

ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் எதிர்மறையான பலன் செய்யும் என்றால் நல்ல கிரகமாக இருந்தால் பாதகமான பலன்களையும் பாதகமான கிரகங்களாக இருந்தால் நல்ல பலன்களையும் செய்ய வேண்டும் என்பதுதானே விதி இங்கு பாதகமான கிரகம் எனப்படும் புதன் வக்ரம் பெறுவதால் நல்ல பலன்கள் தானே நடக்க வேண்டும் ஏன் நடக்கவில்லை அந்த புதன் அமர்ந்து இருக்கக்கூடிய நட்சத்திரம் இன்னொரு வக்கிரம் பெற்ற கிரகத்தின் நட்சத்திரம் ராகு கேதுக்கள் உடன் வக்கிரம் பெற்ற கிரகங்கள் இணைந்திருந்தால் மிகுந்த யோகத்தைச் செய்யும் என்ற விதியைப் பல இடங்களில் நாம் பார்த்து இருக்கிறோம் ஆனால் அவை பாம்பு கிரகங்களுக்கு மட்டுமே சொந்தமானவை 

 

ராகு-கேது சம்பந்தப்படாமல் ஒரு கிரகம் வக்கிரம் பெற்று யோகத்தைச் செய்ய வேண்டும் என்றால் இன்னொரு வக்கிரம் அதனோடு சம்பந்தப்பட கூடாது அவ்வாறு இரண்டு வக்ர கிரகங்கள் சம்பந்தப்பட்டால் அதனுடைய பலனை கணிப்பது என்பது கிட்டத்தட்ட ராகு கேதுக்கள் ஒருவரை ஒருவர் சார பரிவர்த்தனை பெற்று இருக்கும்பொழுது பலன்களை எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்குமோ அவ்வளவு கடினமான ஒரு செயல் 

 

இங்கு சனி வக்கிரம் பெறாமல் இருந்திருந்தால் இந்த குடும்பம் நிச்சயமாக பிரிவினையை சந்தித்திருக்கிறது புதன் வக்கிரம்  ஒன்றும் பிரச்சினை கிடையாது அதனால்தான் ஜோதிடத்தை படித்து தெரிந்து கொள்வதை விட புரிந்து கொள்ளவேண்டும் என்று நம்முன்னோர்கள் கூறினார்கள் இருவரும் தனித் தனியாக சென்று விட்டாலும் இருவருடைய வாழ்க்கையும் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் இருக்க பரம்பொருள் அருள் புரியட்டும் 

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக

 திருச்சிற்றம்பலம்