பரிவர்த்தனை யோகத்தில் கிரகங்கள் எவ்வாறு வேலை செய்கின்றது ?

பரிவர்த்தனை யோகத்தில் இருக்கின்ற கிரகங்கள் தான் இருக்கின்ற இடத்தை பலனைச் செய்வதைவிட பரிவர்த்தனை ஆகி ஆட்சி பெற்ற நிலையில் இருக்கும் பொழுதுதான் வலுவான பலன்களை செய்கிறது எனவே ஒரு பரிவர்த்தனை யோகத்தில் பலன்களை கணிக்கும்போது கிரகங்களை மாற்றி வைத்துத்தான் கணிக்க வேண்டும் அப்போதுதான் சரியான பலன் கைக்கு கிடைக்கும் 

ஒரு பரிவர்த்தனை யோகம் இருந்தால் இரண்டு கிரகங்கள் ஆட்சி பெற்று நிலையை அடைந்துவிடும் அதனால் தான் பரிவர்த்தனையை சாதாரணமாகச் சொல்லாமல் பரிவர்த்தனை யோகம் என்று சொன்னார்கள் இரண்டு பரிவர்த்தனைகளை ஒரு ஜாதகத்தில் இருந்துவிட்டால் நான்கு கிரகங்கள் ஆட்சி பெற்று நிற்பதாக அர்த்தம் ஒரு பரிவர்த்தனை இருந்தால் கூட இரண்டு கிரகங்கள் ஆட்சி ஆகிவிடும் ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி அல்லது உச்சமாக இருந்தால் அது யோக ஜாதகம் என்கிறோம் அந்த வகையில் பரிவர்த்தனை யோகத்தில் இரண்டு கிரகங்கள் ஆட்சி பெறுவதால் இது மிகச்சிறந்த யோகமாக பார்க்கப்படுகிறது இந்த பரிவர்த்தனை தொடர்பான பலன்களை எடுக்கும்பொழுது கிரகநிலை அவை இருக்கும் இடத்திலிருந்து பரிவர்த்தனை ஆனதாக மாற்றி வைத்துத்தான் பலனைப் பார்க்க வேண்டும் அதுதான் சரியான முறையாக இருக்கும் இதை எவ்வாறு தெரிந்து கொள்வது இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டை பயன்படுத்துவோம் பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள் 

இது ஒரு பெண்ணின் ஜாதகம் இவருக்கு தற்பொழுது நடந்து கொண்டிருப்பது செவ்வாய் திசை லக்கினத்திற்கு செவ்வாய் மூன்றாம் இடத்தில் உச்சம் பெற்ற நிலையில் நிற்கிறார் மூன்றாம் இடத்து அதிபதி சனி பகவானும் லக்கினத்தில் இருக்கிறார் எனவே செவ்வாய்க்கும் சனிக்கும் பரிவர்த்தனை யோகம் வருகிறது இங்கு செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவே பலன் எடுத்துக்கொண்டால் இந்த செவ்வாய் திசை மிகச் சிறப்பான திசையாக இருக்கும் சொத்து சுகம் வாங்குவார்கள் வீடு வாசல் கட்டுவார்கள் பொருளாதாரத்தை மேன்மையான நிலையை அடைவார்கள் நோய்நொடி என்ற வகையில் ரத்த அழுத்தம் தொடர்பான உடல் தொல்லைகளை கொடுக்கலாம் வயதானவர்களாக இருந்தால் கழுத்து வலி கை வலி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு எலும்பு தேய்மானம் என்பதன் மூலமாக மற்றபடி இது யோக தசையாக தான் இருக்கும் அல்லவா? 

ஆனால் என்ன நடக்கிறது கணவன்-மனைவிக்கிடையே பிரச்சினைகள் அதிகமாகும் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறான் இந்த பெண் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார் இனிமேல் கணவரோடு சேர்ந்து கிடைக்க முடியாது வாழ்க்கையில் கூடாது என்பதால் மணவிலக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு ஒரு பெரும் தொகையையும் கேட்டுகொண்டிருக்கிறார் 

செவ்வாய் ஒன்றாம் இடம் எனப்படும் லக்கினத்தில் அல்லது ஏழாம் இடம் எனப்படும் களஸ்திர ஸ்தானத்தில் இருந்தால் குடும்பத்தில் செவ்வாய் திசை நடக்கும் ஆனால் பிரிவினை என்பது தவிர்க்க இயலாதது என்பதை பல இடங்களில் நமது காணொளிகளை கேஸ் ஸ்டடி செய்திருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே அந்த வகையில் பரிவர்த்தனை யோகத்தின் வழியாக லக்கினத்தில் செவ்வாய் எடுத்து வைத்துக்கொண்டு பணம் எடுத்து பாருங்கள் மிகச் சரியாக வரும் இந்த குடும்பங்கள் சேர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் ஏனெனில் நடப்பதில் செவ்வாய் திசை அப்படியானால் செவ்வாய் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய பலன்களைச் செய்ய என்றால் செய்யும் ஆனால் அந்த பலன்கள் மிக பலவீனமாக இருக்கும் லக்கினத்தில் செவ்வாய் இருக்கும் பலன்கள் மிக வலுவாக இருக்கும் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம் 

ஆகவே பரிவர்த்தனை யோகம் என்பது சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களும் ஆட்சி வீட்டில் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ அதைத்தான் செய்யும் என்பது இதன்மூலம் புரிந்து கொண்டிருக்கலாம் 

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக

 திருச்சிற்றம்பலம் !!