சுத்த ஜாதகத்தையும் சுத்தி விடும் ராகு கேது 

ராகு கேதுக்களின் சக்தி என்பது அளவிடற்கரியது ஜோதிடத்தில் மிக அதிகமான வலுவுள்ள கிரகம் பாவ கிரகம் எனப்படும் ராகுவும் கேதுவும் தான் என்று குறிப்பிடுகிறார்கள் என்ன காரணம் என்று பார்க்கலாமா மற்ற எல்லா கிரகங்களும் ஆட்சி உச்சம் நீசம் பகை போன்ற நிலைகளில் நிற்கும்பொழுது அவைகளுக்கு ஏற்ற தோஷத்தை  அல்லது யோகத்தை கொடுக்கும் ஆனால் ராகு கேதுக்கள் அப்படி அல்ல எந்த ஒரு தோஷமும் இல்லாத ஒரு ஜாதகத்தையும் மிகப்பெரிய சிக்கலுக்குள் இழுத்து விடக்கூடிய  வலுப்பெற்றவர்கள் இந்த இரு சாயா கிரகங்கள் எனப்படும் நிழல் கிரகங்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொண்டு பார்க்கலாம் பின்வரும் ஜாதகத்தை கவனிக்கவும்

இது ஒரு பெண்ணின் ஜாதகம் இந்த ஜாதகத்தில் இரண்டாம் இடத்து அதிபதியான குரு பகவான் 11-ஆம் இடத்தில் சந்திரனுடன் இணைந்து சுக்கிரன் பார்வையில் வக்கிரமாகி நிற்கிறார் இது தாரதோஷம் என்று எடுத்துக்கொண்டால் கூட அதாவது இரண்டாம் இடத்து அதிபதியான குரு பகவான் வக்கிரம் பெற்ற நிலையில் நிற்பது தாரதோஷம் என்று எடுத்துக்கொண்டால் கூட அது குரு தசையில் தான் வேலை செய்யும் குரு தசை நடக்கும் பொழுதுதான் குடும்பம் பிரியும் 

ஆனால் தற்பொழுது நடந்து கொண்டிருப்பது ராகு தசையில் முற்பகுதி  இப்பொழுது இந்த பெண்ணிற்கு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை இல்லாமல் போய் இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள் மாமியாரும் கணவரின் அக்காவும் செய்கின்ற சேவையில் பிரமித்துப் போய் பிரச்சனையில் சிக்கி இவர்களுக்கு இருவருக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டு குடும்பம் பிரிந்து விட்டது குரு தசை நடந்து குடும்பம் பிரிந்து இருந்தால் குடும்ப ஸ்தானாதிபதி வக்ரம் ஆகிறார் எனவே குடும்பம் பிரியும் என்ற முடிவுக்கு வந்துவிடலாம் ஆனால் ராகு தசையில் என் குடும்பம் பிரிந்தது, 

ராகு பகவான் நின்ற ஸ்தானாதிபதி செவ்வாய் நீசம் பெற்ற நிலையில் நிற்கிறார் அதுவும் திரிகோணத்தில் எனவே செவ்வாய் பார்க்கின்ற இடம் எல்லாமே பாதிக்கும் செவ்வாய் 4ம் பார்வையாக லக்கினத்திற்கு 12ம் இடத்தை பார்க்கிறார் எனவே கணவன் மனைவிக்கிடையில் தாம்பத்தியத்தில் நிம்மதியான தாம்பத்தியம் இல்லாமல் போய்விடும் 7-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார் கௌரவம் பாதிக்கப்படும் வெளிநாடுகளில் சென்று படித்த இந்த பெண்ணை கணவர் கைநீட்டி அடிக்கிறார் வேலைக்கு செல்லக் கூடாது என்று கட்டளை போட்டு வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற செயல்களெல்லாம் கவுரவத்தை பாதிக்கக்கூடியது தானே அதுவும் ரோட்டில் வைத்து சண்டை போடுகின்றனர் அந்த அளவுக்கு  மிக கௌரவமாக குடும்பம் நடத்தியிருக்கின்றனர் எனவே கௌரவ  ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடமும் அடி வாங்குகிறது எட்டாம் பார்வையாக செவ்வாய் லக்னத்திற்கு 4ம் இடமான கும்பத்தை பார்க்கிறார் அங்கு ஏற்கனவே சனி பகவான் அமர்ந்து இருக்கிறார் ஆகவே சுகஸ்தானம் என்பதும் அடிபட்டுப் போய்விடுகிறது திருமணம் ஆனதிலிருந்து இந்த பெண்ணிற்கு சுகம் என்பதை விட சோதனைகள் என்பது தான் அதிகமாக வருகிறது இதற்கு என்ன காரணம் செவ்வாய் பார்வை மட்டுமே ஆனால் இதே செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் நின்று இருந்தால் அவர் பார்க்கும் இடம் எல்லாமே வளர்ச்சி அடைந்திருக்கும் 

ராகு கேது இவர்களுக்கு வீடு கொடுத்த கிரகம் மிகவும் முக்கியம் அவர்கள் சரியாக இருந்தால் தான் அந்த ராகு தசை சிறப்பாக இருக்கும் இல்லாவிட்டால் என்னதான் யோகமான இடத்தில் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் கூட  அந்த ஸ்தானாதிபதி வலுவிழந்து விட்டால்  அந்த தசை பிரச்சனைக்குரிய தசையாக தான் முடியும் இதைத்தான் இந்த ஜாதகத்தில் பார்க்கிறோம் 

இவர்களுக்கு மணவிலக்கு வருமா என்பதுதான் கேள்வி நிச்சயமாக இருவரும் ஒன்று சேர்ந்து வாழ வழி இல்லை ஏனெனில் ராகு திசையிலேயே இவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது என்ற பட்சத்தில் அடுத்து வரும் குரு தசையில் நிச்சயமாக குடும்பம் பிரிந்து விடும் என்பதால் தற்போது குழந்தை இல்லாத நிலையிலேயே இந்த குடும்பத்தை பிரித்து இந்த பெண்ணை வேறொரு நபருக்கு கட்டி கொடுப்பதன் மூலம் தார தோஷம் நிவர்த்தியாகி மறு திருமணத்தில் நிம்மதியான வாழ்க்கையை இந்த ஜாதகி அடைவார் என்பது உறுதி செய்யப்படுகிறது 

இப்படியான ஒரு ஜாதகத்திற்கு என்ன தான் திருமணத்திற்கு முன்னால் நமக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தாலும் நல்ல பையனாக பார்த்து கட்டி கொடுத்தாலும் இதைத் தவிர்க்க முடியாது என்பதுதான் உண்மை காரணம் ராகுபகவான் லக்னத்தில் நின்று கம்பு சுற்றுகிறார் அவருக்கு எதிர்த்து நிற்க எந்த கிரகத்தாலும்  இயலாது என்பதால் டைவர்ஸ் என்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது 

ராகு கேது எந்த அளவிற்கு பலம் பொருந்தியவர்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்து இந்தப்பெண் சீரும் சிறப்புமாக வாழ இறையருள் கிடைக்கட்டும்

 

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!

 

 திருச்சிற்றம்பலம்!