சுக்கிரன் திசை யோகத்தை அள்ளித் தருமா?
பொதுவாக ஒருவருக்கு சுக்கிர தசை நடக்கிறது என்றால் மிக சந்தோஷமாக ஆகிவிடுவார்கள் நினைத்த விருப்பங்கள் அத்தனையும் நிறைவேறும் சொத்து சுகங்கள் வாங்குவது கார் வண்டி வாகன வசதிகள் அமைவது திருமணம் முடிந்தது சமுதாயத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும் சம்பாதிப்பது போன்ற பல விஷயங்களை மிகப் பிரமாதமாக சாதித்து கொடுப்பது சுக்கிர திசை என்பதால் அனைவருக்குமே சுக்கிரதசை என்றால் ஒரு மிகப்பெரிய விருப்பம் ஆனால் சுக்கிரன் எல்லோருக்கும் யோகத்தைச் செய்து விடுகிறதா என்றால் சிலருக்கு மிகப்பெரிய யோகத்தைச் செய்யும் சிலரை வைத்து செய்துவிடும்
எடுத்துக்காட்டாக ஒரு பிறந்த குழந்தைக்கு அது பெண் குழந்தை குழந்தையானாலும் ஆண் குழந்தையானாலும் சுக்கிர தசையில் பிறந்துவிட்டால் அதாவது பரணி பூரம் பூராடம் என்ற மூன்று நட்சத்திரங்களில் பிறந்தாள் பிறந்தவுடன் சுக்கிர திசை ஆரம்பித்துவிடும் அவ்வாறு சுக்கிரதசை ஆரம்பித்தாள் அது பெற்றோருக்கு சோதனையான காலமாக மாறுவதற்கு வாய்ப்பு ஒன்று பெரும்பாலும் தந்தையின் தொழில் மாறுவதற்கு அல்லது இடம் மாறி அமைவதற்கு வாய்ப்பு உண்டாகிவிடும் அதே மாதிரி பெரும்பான்மையானவர்கள் தான் குடியிருக்கும் இடத்தை விட்டு இடம் மாறுவார்கள் தந்தை வழியில் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டாகி விடும் ஆனால் சுக்கிர திசை யோகம் செய்யுமே என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் ஆனால் மிகக் குறைவான சதவிகிதம் பேருக்கு ஒரு 10 சதவிகிதத்துக்கும் கீழே இருப்பவர்களுக்கு மிகுந்த யோகத்தை செய்வதும் உண்டு பல படிகள் வாழ்க்கையில் பெற்றோர்கள் முன்னேறி விடுவார்கள் இது ஜனன காலத்தில் சுக்கிரன் தசை நடந்தால் நடக்கும்
பொதுவாக சுக்கிர திசை ஒரு 25 அல்லது 35 வயதிற்கு மேல் துவங்கினால் அடுத்து வரக்கூடிய 20 வருடமும் யோக தசையாக நடந்து நல்ல பொருளாதாரத்தை அள்ளி கொடுத்து விடும் சிறிய வயதில் சுக்கிர தசை என்பது பெற்றோரை கஷ்டப்படுத்த கூடிய வகையில் தான் இருக்கும் ஆனால் வயதான காலங்களில் அதாவது குறைந்தபட்சம் 25 வயதிற்கு மேல் வரக்கூடிய சுக்கிரன் திசை யோகத்தை தான் செய்யும்
இதில் விதிவிலக்காக யாராவது ஒரு சிலருக்கு இந்த சுக்கிர திசை பெரியவர்களாகி நடந்தால்கூட சிக்கலில் மாட்டி விடுவது உண்டு அப்படியானால் சுக்கிர தசை என்பது எல்லோருக்கும் யோகத்தை செய்யும் என்று கண்ணை மூடிக் கொண்டு செல்வது வெள்ளையாக இருப்பது எல்லாம் பால் என்று எடுத்துக் கொள்வதற்குச் சமம் சுக்கிரன் திசை எப்படி ஒருவருக்கு எதிர்மறையாக பேசுகிறது என்பதையும் தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா அந்த வகையில் எதிர்மறையான செயல்பாடுகளை செய்த சுக்கிரனை ஒரு எடுத்துக்காட்டுடன் காண்போம்
இந்த ஜாதகர் ஒரு மிகப் பெரிய செல்வந்தர் ஆவார் தாய்நாட்டில் இருந்து வெளிநாடு சென்று சொந்த தொழில் செய்து பல கோடிகள் சம்பாதித்த ஜாதகம் சொந்த வீடு 20 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு வாழ்க்கை கார் வண்டி வாகன வசதிகள் என்று பேரோடும் புகழோடும் சீரும் சிறப்புமாக சென்றுக்கொண்டிருந்த அவருடைய வாழ்க்கை சுக்கிரதிசை ஆரம்பித்தவுடன் சுளுக்கு பிடித்துக் கொண்டது போல் பிரச்சனைகளை கூடவே இழுத்துக்கொண்டு வந்து விட்டது 2017 ஆரம்பித்த சுக்கிரன் திசை ஒரு வருடம் முன்னதாகவே அதாவது 2016ஆம் ஆண்டு முதலே இவருக்கு பொருளாதார ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தி கடன் வாங்க வைத்தது ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் ஒரு தொழில் பிரச்சினையை தீர்க்க மற்றொரு தொழில் என்று ஒவ்வொன்றிலும் அகலக்கால் வைக்க வைத்து மிகப்பெரிய கடனாளியாக பல கோடி ரூபாய் கடன் வாங்க காரணமாகிவிட்டது இதனால் வங்கியிலும் பெயர் கெட்டு விட்டது முழுமையாக தொழில் செய்வதற்கு எந்த விதமான லைசென்சும் இவருக்கு இல்லை என்று அரசாங்கம் மறுத்துவிட்டது கையிலும் பொருளாதாரம் இல்லை கடன் பிரச்சினைகள் அதிகப்பட்டு கொண்டே இருக்கிறது குழந்தைகள் இருவரும் இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை இருவருக்குமே திருமணம் ஆகவில்லை தொழிலும் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் முழுமை பெறவில்லை ஆக குடும்பத்தை எந்தவிதமான செட்டில்மென்ட் இல்லாமல் கடன் மட்டும் பல கோடி ரூபாய்! கோபுரத்தில் நின்று கொண்டிருந்த இந்த ஜாதகரை குப்பை மேட்டுக்கு தள்ளிவிட்டது கோடிகளில் புரண்ட இந்த ஜாதகர் கையில் தட்டை எடுத்து பிச்சை எடுக்கவில்லை என்பது ஒன்றுதான் குறையாக இருக்கிறது அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு விட்டார் இதற்கு என்ன காரணம் இத்தனையும் நடந்தது சுக்கிரன் திசையில்தான் இதற்கு முன்னால் மிகச் சிறப்பாகவும் நன்றாகவும் நல்ல கௌரவத்துடனும் வாழ்ந்துகொண்டிருந்த இவருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்ட இந்த சுக்கிரன் அப்படி என்னதான் சொல்கிறார்
ஸ்திர ராசியான சிம்மத்திற்கு மாரகாதிபதி ஆக வருபவர் சுக்கிரன் அவர் சனி சாரம் வாங்கி இருக்கிறார் சனி பகவான் மாரக ஸ்தானத்தில் உச்சம் பெற்ற நிலையில் நிற்கிறார் எனவே சுக்கிரன் தசையும் மாரகம் செய்ய வேண்டும் அதாவது ஜாதகரின் ஆயுள் முடிய வேண்டும் ஆனால் லக்கினாதிபதி சூரியன் கேந்திர பலம் பெற்று நிற்பதால் நீடித்த ஆயுள் பாக்கியம் உண்டு எனவே ஆயுள் வலுவாக இருப்பதால் ஜாதகரின் பொருளாதாரத்தை அதாவது கௌரவத்தை தரையோடு தரையாக செய்துவிட்டது ஒருவேளை இந்த அளவுக்கு பொருளாதார நஷ்டம் இவருக்கு வராமல் இருந்திருந்தால் ஆயுள் என்ற ஒன்று இல்லாமலே போயிருக்கும் அதைக்காட்டிலும் பொருளாதாரம் போனது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை சம்பாதித்துக் கொள்ளலாம் சுக்கிரன் திசை எந்த அளவிற்கு வைத்து செய்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் எனவே சுக்கிரதிசை என்றவுடன் கோபுரத்தில் ஏற்றி கொண்டு சென்று விட்டுவிடும் என்று அல்லது சுக்கிரதிசை என்றவுடன் குப்பைமேட்டில் தள்ளிவிடும் என்று முடிவுக்கு வருவது என்பது அரைகுறை முடிவாகத்தான் இருக்கும் எதையும் ஆய்ந்து அறிந்து தெரிந்து கொள்வது சிறப்பான முடிவினை அடைய வழிவகுக்கும்
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்