ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களால் யோகமா?
வேலை அல்லது தொழில் மாற்றுவது எப்போது ?
பொதுவாகவே ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் யோகத்தை செய்யும் என்பது தான் ஜோதிட விதியாகும். ஆனால் எல்லா ஜாதாகங்களிலும் எல்லா நேரங்களிலும் யோகத்தை தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. சில நேரங்களில் யோகத்தை செய்வதிர்க்கும் பதிலாக வைத்து செய்து விடுவதும் உண்டு.
ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் திசை அல்லது புத்தி நடத்தும்போது வேலை இல்லாமல் போவது அல்லது வேலையில் இடம் மாறுவது போன்ற பலன்கள் தவிர்க்க இயலாமல் நடக்கும்.
ஏன் இவ்வாறு நடைபெறுகிறது?
யோகம் செய்யும் கிரகங்கள் தோஷமும் செய்யுமா?
ஒரு கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற நிலையில் இருக்கிறது என்றால் கிட்ட தட்ட அரசனைப்போல் இருக்கிறது என்று அர்த்தம். அரசனுக்கு யாராவது வேலை சொல்ல முடியுமா ? அரசன் தான் எல்லோருக்கும் வேலை சொல்லுவார் அல்லவா?
ஆட்சி பெற்ற கிரகங்கள் பாதிக்குமா? என்றால் என்ன அபத்தமாக பேசுகிறாய், இதெல்லாம் ஜோதிட விதியே அல்ல, இவர்களின் சுய கண்டுபிடிப்பு என்றெல்லாம் நினைக்கலாம்.
நீங்கள் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் திசை அல்லது புத்தியை சம்பாதிக்கும் வயது காலங்களில் கடந்து வந்து இருந்தால் உண்மையை உணர்ந்து இருப்பீர்கள். இதற்க்கு நீங்கள் என்ன படித்து எப்பேர்ப்பட்ட குவாலிபிகேஷன் வைத்து இருந்தாலும், எத்தனை வருட அனுபவம் இருந்தாலும் தொழில் என்று வரும்போது சுற்றில் விட்டு விடும். குறைந்த பச்சம் ஒரு இன்டெர்னல் சேஞ்ச் ஆவது வரும்.
வழக்கம் போல இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு ஜாதகத்தை பார்ப்போம், பின் வரும் இந்த ஜாதகர் மிக உயர்வான படிப்புகள் படித்தவர் தாய் நாட்டை விட்டு வெளிநாடு சென்று உயர்வான பல கல்விகளையும் படித்து பல பட்டங்களை பெற்றவர், அதே போன்று வேலையிலும் பல சாதனைகளை புரிந்தவர்.
தற்போது இந்த ஜாதகத்தில் செவ்வாய் திசை, சுக்கிரன் புக்தி நடந்து கொண்டுள்ளது. செவ்வாய் அஷ்டமாதிபதி மற்றும் 3 ஆம் பாவ அதிபதி அவர் திரிகோணத்தில் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்து இருக்கிறார். ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் இணைந்து இருப்பது யோகம் ஆகும். எனவே ராகுவால் எந்த பாதிப்பும் இங்கு இல்லை.
புத்தி நாதன் சுக்கிரன் 9 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார், இது மாளவியா யோகம் எனப்படும், இவருடன் சனி இணைவது தோஷம் இல்லை 5 மற்றும் 9 ஆம் பாவதிபதிகள் இணைவு யோகத்தை தான் செய்யும்.
இந்த நிலையில் இந்த ஜாதகம் செவ்வாய் திசை சுக்கிரன் புக்தியில் யோகத்தை தான் செய்ய வேண்டும் அல்லவா? ஆனால் அயல் நாட்டில் வேலை போய் சும்மாதான் இருக்கிறார்? இதற்க்கு இவ்விரு கிரகங்களும் ஆட்சி , உச்சம் பெற்றது தான் காரணம் ஆகும். யோகத்தை செய்வதாக இருந்தால், புரமோஷன் , ஊதிய உயர்வு போன்றவற்றை கொடுத்து இருக்கும் அல்லவா? இதற்க்கு எதிர் மறையான பலன்களை செய்கிறது என்றால் ஆட்சி உச்சம் இங்கு பலன் மாறுதலாக தருகிறது என்று அர்த்தம்.
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருசிற்றம்பலம்