கையில் கொடுப்பது ஆண் ஜாதகமா பெண் ஜாதகமா என்பதை மிக எளிதாக கண்டு கொள்ளலாம் படித்தாலே தெரிந்து விடப்போகிறது இதில் என்ன பெரிய ஜோதிடம் வேண்டிக்கிடக்கிறது ஆனால் விஷயம் அப்படி அல்ல ஒரு ஆண் ஜாதகம் என்பது எவ்வாறு அமையும் அல்லது பெண் ஜாதகம் என்பது எவ்வாறு அமையும் என்பதற்கு வழிமுறைகள் உண்டு இதைக்கொண்டு ஒரு ஜாதகத்தின் பெயரை கொடுக்காவிட்டால் கூட அது ஆண் ஜாதகம் அல்லது பெண் ஜாதகம் என்பதை கூறிவிடலாம் இம்மாதிரியான கணக்கீடுகள் எல்லாம் மேனுவல் ஆக போடும்போது சரிசெய்து போடுவார்கள் ஆனால் தற்காலங்களில் கம்ப்யூட்டர் வந்துவிட்டது ஜாதகம் கணிப்பதற்கு ஷட் வர்க்க முதல் அஷ்டவர்க்கம் வரை மகாதசை முதல் கோச்சாரம் வரை கிழக்கும் மேற்கும் தெற்கும் வடக்கும் மிகவும் துல்லியமாக அறிந்து ஜாதகத்தை அடித்து கையில் கொடுத்து விடுகிறது ஆனாலும் கம்ப்யூட்டர் என்பது நாம் கொடுக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது நாம் கொடுக்கும் தரவுகள் தவறாக இருக்குமானால் வருகின்ற அரசும் அதாவது கொடுக்கின்ற ஜாதகமும் தவறாகத்தான் கொடுக்கும் நாம் உள்ளீடு என்ற விவரங்கள் சரியானவை தானா என்பதனை சரி செய்வதற்கு ஜோதிடத்தில் பல முறைகள் உள்ளன அவற்றை நாம் இங்கு பார்க்கவேண்டாம் தலைப்பு அதைப் பற்றியது அல்ல ஒரு ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது ஆண் ஜாதகம் அல்லது பெண் ஜாதகம் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது ஒரு ஜாதகத்தில் நவாம்ச லக்கினம் எங்கு வருகிறது என்று பாருங்கள் மேஷம் ஆண் வீடு ரிஷபம் பெண் வீடு மிதுனம் ஆண் வீடு கடகம் பெண் வீடு சிம்மம் ஆன் வீடு இப்படி ஆண்-பெண் வீடுகள் நமக்கு எளிதாக தெரியும் நவாம்ச லக்கினம் ஆண் வீட்டில் அமைந்து இருந்தால் அது ஆண் குழந்தை என்றும் பெண் வீட்டில் அமைந்து இருந்தால் அது பெண் குழந்தை என்றும் அறியத்தகும் ஆனால் ஒரு சில ஜாதகங்களில் ஆண் குழந்தைகளுக்கு பெண் நவாம்ச லக்னமும் பெண் குழந்தைகளுக்கு ஆண் நவாம்ச லக்னமும் வருவது உண்டு இது சூரிய உதயத்தை கணக்கிடுவதில் அல்லது நாளைக்கு வினாடியே கணக்கிடுவதில் அல்லது குழந்தை பிறந்த நேரத்தை ஜோதிடரிடம் கொடுக்கும் பொழுது அந்த நேரத்திலேயே பிழையாக இருப்பது போன்ற காரணங்களால் மாறி வருவதற்கு வாய்ப்புண்டு அவ்வாறு மாறி வரும் பொழுது நேரத்தை அட்ஜஸ்ட் செய்து ஆண் குழந்தைக்கு ஆண் நவாம்ச லக்னமும் பெண் குழந்தைக்குப் பெண் நவாம்ச லக்னமும் வருமாறு கணிப்பது தான் முறையான ஜாதக கணிதம் ஆகும்
எனவே ஒரு ஜாதகத்தில் நவாம்ச லக்கினத்தை கொண்டு அந்த ஜாதகம் பிழையில்லாமல் கணிக்கப்பட்ட இருக்கிறதா என்பதைக்கூட எளிதாக தெரிந்து கொள்ளலாம்
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்