12ல் ராகு பலமா?  தோஷமா? - பதில் இணைக்கப் பட்டுள்ளது 

பொதுவாக ராகு கேதுக்கள் பன்னிரண்டாம் இடத்தில் நின்று தசை நடத்தினால் அது மிகுந்த பாதகமாகவே ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது 12ஆம் இடம் மறைவு ஸ்தானம் என்பது மட்டுமல்ல பன்னிரண்டாம் இடத்தில் எந்த கிரகங்கள் இருந்தாலும் சுபபலன்கள் தருவது அவ்வளவு வலுவாக இருக்காது என்பதால் 12ஆம் இடத்தில் திசையை நடத்தும் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தாள் அந்த திசை மிகப் பாதகமான திசை ஆகவே நடக்கிறது ஆனாலும் ராகு கேதுக்கள் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அவர்களுக்கு வீடு கொடுத்த கிரகமும் நட்சத்திர சாரம் கொடுத்த கிரகமும் வலுவான நிலையில் இருந்தால் நிச்சயமாக யோகத்தைச் செய்யும் என்பதை பல பதிவுகளில் ஆடியோவாக வீடியோவாகவும் write-ups ஆகவும் பார்த்திருக்கிறோம் 

 

இங்கேதான் ஒரு ட்விஸ்ட் இப்போ ஒரு எடுத்துக்காட்டு ஜாதகம் கொடுக்கிறேன். இந்த ஜாதகருக்கு 12ம் இடத்தில் ராகு அமைந்திருக்கிறது ராகு தசையும் நடந்திருக்கிறது அரசு கோட்டாவில் அதாவது மெரிட் எம்பிபிஎஸ் சீட் கிடைத்து ஆனால் இவர் படிக்கவில்லை இந்த ஜாதகர் நான் எஞ்சினியரிங் தான் படிப்பேன் என்று இன்ஜினியரிங் முடித்துவிட்டு தற்பொழுது மெடிக்கல் கைக்கு கிடைத்த படிப்பு படிக்காமல் விட்டு விட்டேனே என்று மனதளவில் வருந்திக் கொண்டு தன்னுடைய தற்போதைய கேரியர் ஓடு போராடிக் கொண்டும் இருக்கிறார் நமது கேள்வி மிகவும் சிம்பிளானது தான் ராகு திசை இந்த ஜாதகருக்கு யோகமாக நடந்ததா தோஷமாக நடந்ததா ஏன் மெரிட்டில் கிடைத்த மருத்துவ படிப்புக்கு இவரால் போக முடியவில்லை இதற்கான ஜோதிட ரீதியான விளக்கத்தை நமது நண்பர்கள் யூடியூப் வீடியோ கமெண்டில் தெரிவிக்கலாம் இதற்கான எனது கருத்துக்களையும் நாளை வெளியிடுகிறேன்

ராகு திசை பற்றி கேட்டதும் நமது நண்பர்கள் பலவிதங்களிலும் தங்களுடைய சிந்தனை குதிரைகளைத் தட்டி விட்டு இருப்பீர்கள் எட்டு திசைகளிலும் ஓடி அது ஓரிடத்தில் வந்து நின்று இருக்கும் அல்லவா சரி எப்படி பலன் எடுப்பது என்பதை காணலாம்

இந்த ஜாதகருக்கு ராகு திசை பன்னிரெண்டாம் பாவத்தில் நின்று தசை நடத்துகிறது என்பது வரை மிகச் சரி ராகு சனியின் வீட்டில் அமர்ந்திருக்கிறார் அந்த சனி பகவான் ராகுவுக்கு 11-ஆம் இடத்தில் ராகுவின் பார்வையில் அமர்ந்திருக்கிறார் அப்படியானால் வீடு கொடுத்த சனி பலமான நிலையில் தான் இருக்கிறார் எனவே ராகு 12-ஆம் இடத்தில் இருந்தாலும் நல்ல யோகமான பலன்களைக் தான் தரவேண்டும் ஆகவே இந்த ஜாதகர் டாக்டர் படிப்பு படிக்க ஏற்றவர் தான் என்பதை ராகு திசை மிகச் சரியாக தீர்மானம் செய்கிறது

ராகுவிற்கு சாரம் கொடுத்த செவ்வாய் லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் அதாவது கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார் ராகு பெற்றெடுப்பது செவ்வாயின் சாரம் அப்படியானால் மருத்துவப்படிப்பு சாத்தியப்படக் கூடிய ஒன்றுதானே ஆனால் அந்த செவ்வாய் ராகுவுக்கு எட்டாம் இடத்தில் மறைந்து விட்டார் என்பதை கவனிக்கவும் அதுமட்டுமல்ல லக்னத்திற்கும் அவர் பாதகஸ்தானம் தான் ஏறி நிற்கின்றார் எனவே ராகு திசை 50 சதவீத நற்பலன்களை மட்டுமே கொடுக்க முடியும் என்பதால் படிப்பை தடையில்லாமல் தொடர வைத்து பட்டப் படிப்பை முடித்து வைத்து விட்டது மருத்துவ கிரகம் எனப்படும் செவ்வாய் எட்டாம் இடத்தில் அமர்ந்து அதை சனி பார்க்கிறார் அந்த சனியை செவ்வாய் பார்க்கிறார் இந்த காம்பினேஷன் தான் இவருக்கு மருத்துவப் படிப்பின் மீது தீராத காதலை ஏற்படுத்திவிட்டது ஆனாலும் அடுத்தடுத்து வந்த அறிவுரைகளால் மனம் சிதறடிக்கப்பட்டு இவர் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டார் அதற்கு இவரை சுற்றி உள்ளவர்கள் காரணம் என்று கூறியிருந்தார் ஆனால் நிச்சயமாக அப்படி அல்ல காரணம் இவருக்கு எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் அதை நடத்துபவர்களாக கருவிகள்தான் சுற்றிலும் இருப்பவர்களாக இருப்பார்களே தவிர அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வாழ்க்கையை புரட்டிப் போட முடியாது போகட்டும் நமது கேள்வி இந்த ஜாதகருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும் ஏன் போக முடியவில்லை ஏன் மருத்துவம் படிக்க முடியவில்லை அவ்வளவுதான் இதற்கு காரணம் செவ்வாய் எட்டாமிடத்தில் போய் மறைந்தது என்பது தலையாய காரணமாக எடுத்துக்கொள்ளலாம் ஆனாலும் அடுத்து வரக்கூடிய குரு திசை இந்த ஜாதகருக்கு மிகப்பெரிய பொருளாதார விருத்தியை கொடுக்கக்கூடிய திசையாக தான் இருக்கும் வாழ்க்கையில் நிச்சயமாக பல சாதனைகளைச் சாதிக்க கூடியவராக வருவார் பரம்பொருள் என்றும் துணை நிற்கட்டும்

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக

 

 திருச்சிற்றம்பலம்