ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கக் கூடிய கிரகம் யோகத்தை தானே செய்ய வேண்டும் அப்படியானால் ஒரு கிரகம் ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது அந்த ஜாதகர் எல்லா யோக பாக்கியங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பை பெற்று வாழ்க்கையை சிறப்பாக அனுபவித்து வாழ்வார் என்று எடுத்துக்கொள்ளலாம்
ஆட்சி பெற்ற கிரகங்கள் யோகத்தைக் கொடுக்கும் என்றாலும் அந்த ஆட்சி எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்பது மிக முக்கியமானது கலெக்டர் என்றவுடன் நமக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நினைவுக்கு வருவார் ஆனால் அலுவலகத்தில் பில் கலெக்டரைக்கூட கலெக்டர் என்றுதான் சொல்லுகிறோம்
எனவே ஒரு கிரகம் ஆட்சி பெற்று நிலையில் இருக்கிறது என்பதனால் மிகுந்த யோகத்தை பெற்றிருக்கிறது என்றும் அந்த திசை வந்தவுடன் நீங்கள் வாழ்க்கையில் மிக உயரமான இடத்திற்குச் சென்று விடுவீர்கள் உங்கள் வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் ஓடிவிடும் என்றெல்லாம் கூறுவது அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்
அதே போன்று ஒரு கிரகம் நீசம் ஆகிவிட்டது அந்த கிரகத்தின் திசை நடக்கிறது என்பதுதான் அந்த ஜாதகருக்கு எந்தவிதமான குறைச்சலும் வந்துவிடாது இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலர் நீசம் பெற்ற கிரகத்தின் தசை களில் மிகப்பெரிய சாதனைகளையும் செய்துவிடுவார்கள்
பின்வரும் ஜாதகத்தை அவதானிக்கவும் இந்த ஜாதகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிரன் திசை லக்கினத்திற்கு எட்டாம் இடத்து அதிபதியும் மூன்றாம் இடத்து அதிபதியான சுக்கிரன் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார் இந்த சுக்கிர திசை இந்த ஜாதகிக்கு என்ன மாதிரியான யோக பாக்கியங்களை கொடுக்கும் என்பதை கணிக்கவும்
இந்த ஜாதகரின் 15 வயது முதல் 35 வயது வரை சுக்கிரன் திசை தான் நடந்து கொண்டிருக்கும் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சுக்கிரன் யோகத்தை தான் செய்வார் எட்டாம் இடத்து அதிபதி திசை கெடுத்து விடாதே என்றால் நிச்சயமாக கெடுக்கும் வாய்ப்புகள் உண்டு எட்டாம் இடத்து அதிபதி திசை கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து திசை நடத்தினால் அந்த தசையில் ஜாதகர் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக நேரிடும் ஆனால் எட்டாம் இடத்து அதிபதி அவருடைய வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது என்பது யோகம் தானே தவிர தோஷம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது
அதுமட்டுமல்ல திசாநாதன் ஆன சுக்கிரன் மனம் நிறைந்த நல்ல கணவனை கொடுத்திருக்கிறது இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறது அமெரிக்க வாழ்க்கையும் கொடுத்திருக்கிறது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு கணவரை வேலைக்கு அனுப்பிக்கொண்டு சந்தோசமாக இருக்க வேண்டியது தானே? எல்லா விதமான வசதி வாய்ப்புகள் இருந்தும் மனதளவில் மிக அதிகமான கஷ்டப்படுகிறார் இதற்கு என்ன காரணம் , இவருடைய மனம்தான் காரணம்
தனக்கு தீர்க்க முடியாத வியாதி ஏதோ வந்து விட்டது என்ற எண்ணத்தில் ஒவ்வொரு டாக்டராக போய் பார்த்து எல்லாவிதமான டெஸ்ட்டுகள் எடுத்து அவர்கள் ஒன்றும் இல்லை உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும்கூட ஒருவேளை டாக்டர்கள் சரியாக கவனித்து பார்க்கவில்லையே என்ற மன உளைச்சல் மிக அதிகமாக ஆகி விட்டது இதனால் சரியாக சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை திடீரென்று இந்த வாழ்க்கையை விட்டு சென்று விடுவோம் என்று பயம் வந்து விடுகிறது இதனால் குழந்தையையும் கணவரையும் விட்டு பிரிந்து விடுவோமே என்ற பயத்தின் காரணமாக இரவு நெடுநேரம் வரை தூக்கம் வருவதில்லை இடையில் முழிப்பு வந்தால் மீண்டும் தூங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்பது போன்ற கடினமான சூழ்நிலையை மனதளவில் கடந்து கொண்டிருக்கிறார்
வாழ்க்கைக்கு தேவையான எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் இருக்கிறது மனதுக்கு பிடித்த கணவர் கண் நிறைந்த குழந்தைகள் என்று எல்லாம் இருந்தும் என் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் இத்தனைக்கும் தற்பொழுது நடந்து கொண்டிருப்பது ஆட்சி பெற்ற சுக்கிரன் திசை தானே? பிறகு ஏன் இந்த பஞ்சாயத்து எல்லாம்.
இயல்பாகவே எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் நிற்கக்கூடிய சுக்கிரன் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் கொடுத்துவிடுவார் ஆனால் சுக்கிரனுடன் இணைந்து இருக்கக்கூடிய பாதகாதிபதியான புதன் மற்றும் சுக்கிரன் வாங்கியிருக்கும் சாரம் லக்கின அதிபதியான குரு நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார் இங்கு சுக்கிரனின் முக்கியத்துவத்தை விட குருவின் முக்கியத்துவம் அதிகமானது லக்னாதிபதியான குரு ஆயுளை கொடுக்கக் கூடியவர் அவர் 12-ம் இடத்தில் அதாவது மோட்ச ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று நிற்பதால் அடிக்கடி இந்த வாழ்க்கையை பகுதியிலேயே விட்டுவிட்டு மோட்சத்திற்கு சென்று விடுவோம் என்ற பயம் வந்துவிடுகிறது அதுமட்டுமல்லாமல் மாரகாதிபதி யாகவும் சுக்கிரன் அமைந்துவிடுவதால் ஆயுளைப் பற்றிய பயம் குறைவில்லாமல் வளர்ந்துகொண்டே வந்துவிட்டது
சரி ஒருவேளை இந்த ஜாதகிக்கு ஆயுள் ஏதும் கம்மியாகத்தான் உள்ளதா? லக்கினாதிபதி 12ஆம் இடத்தில் வக்கிரம் பெற்ற நிலையில் நிற்பது பலமிழந்த நிலைதான் எட்டாம் இடத்து அதிபதியான சுக்கிரன் ஆட்சிபெற்று நிலையில் இருப்பதும் ஆயுள்காரகன் சனி பரிவர்த்தனை யோகத்தில் பதினொன்றாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் நிற்பதும் இந்த ஜாதகத்திற்கு பரிபூரணமான ஆயுள் பாக்கியம் உண்டு என்று காட்டுகிறது ஆனால் லக்னாதிபதி 12ல் மறைந்து வக்கிரம் பெற்ற நிலையில் நிற்பது நெகட்டிவான எண்ணங்களை மனதில் ஆழமாக பதிந்து விட்டது
எனவே தான் தனது கணவரை குழந்தைகளை கண்ணால் காணும் போது அவரையும் அறியாமல் கண்கள் கலங்கி விடுகின்றன மீண்டும் தாய் நாட்டிற்கு வருவோமோ? சொந்த பந்தங்களை பார்க்க வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்றெல்லாம் பயப்படக்கூடிய நிலையில் இந்த ஜாதகியை வைத்து விட்டது ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமலே ஓட்டிக் கொண்டிருக்கிறார் இவை அனைத்திற்கும் சுக்கிரன் தங்கியிருக்கின்ற சாரம் தான் மிக முக்கியமான காரணம் என்று சொல்லிவிடலாம்
எனவே ஆட்சி பெற்ற ஒரு கிரகத்தின் தசை என்பது யோகத்தை கொடுத்தாலும் அது நல்ல நிலையில் முழுமையான ஆட்சி களத்தில் நின்றால் தான் மனதளவில் அதை அனுபவிக்க முடியும் இல்லாவிட்டால் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற மனநிலையுடனே வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் தைரிய ஸ்தானம் என்பது மூன்றாம் இடத்தை சொல்லுவார்கள் தைரியம் வீரியம் பராக்கிரமம் கவுரவமும் என்றெல்லாம் சொல்லக்கூடிய மூன்றாம் இடத்து அதிபதி ஆட்சி பெற்ற நிலையில் நின்றாலும் அதே தைரியம் இன்மையினால் நிம்மதி இல்லாமல் இருக்கக்கூடிய நிலையை இந்த ஜாதகத்தில் காணலாம்
எனவே தைரிய ஸ்தான அதிபதியான மூன்றாம் இடத்து அதிபதி ஆட்சி பெற்ற நிலையில் அல்லது உச்சம் பெற்ற நிலையில் நின்று விட்டால் அவர்களுக்கு பயம் இருக்காது என்று அர்த்தமல்ல அவர்கள்தான் ஸ்பெஷலாக பயப்படுவார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஜாதகத்தை புரிந்துகொள்ளலாம்
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்