ஜாதகத்தில் சனி ராகு சேர்க்கை என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று சனியை தொழில் காரகன் என்று சொல்கிறோம் அதேபோன்று ஆயுள்காரகனும் சனீஸ்வரன் தான் பொதுவாகவே சனி ராகு சேர்க்கை என்பது மிகவும் கெடுதல் ஆகவே பார்க்கப்படுகிறது ஆனால் இதில் பல முக்கிய விஷயங்கள் இணைந்திருக்கின்றன சனி ராகு சேர்ந்து இருக்கின்ற எத்தனையோ பேர் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஆகும் பல பெரிய சொத்து பத்துக்களுக்கு அதிபதிகளாகவும் மிகப்பெரிய தொழிலதிபர்களாகவும் இருப்பதை பார்க்கலாம் அப்படியானால் சனி ராகு இவர்களைக் கெடுத்து விடாதா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம் ஏன் இவர்கள் எல்லாம் சனிக்கும் ராகுவுக்கும் மிகவும் வேண்டியவர்களா?
கண்ணை மூடிக்கொண்டு சனியுடன் ராகு சேர்ந்திருப்பது தொழிலை கெடுத்துவிடும் என்று சொல்வது அறியாமை என்று தான் சொல்ல வேண்டும் இந்த இணைவை சற்று கூர்ந்து கவனிக்கலாம் மகரம் அல்லது கும்பம் இராசியில் சனி ராகு இணைந்து இருப்பதாக வைத்துக்கொள்வோம் இங்கு சனி ஆட்சி பெற்ற நிலையில் நிற்பார் அதனுடன் ராகு இணைந்திருக்கிறார் சாயா கிரகங்கள் எனப்படும் ராகு மற்றும் கேது ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் உடன் இணைந்து இருந்தால் அது மிகப்பெரிய யோகமாக தான் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறதே தவிர தோஷம் கிடையாது எனவே மகர கும்ப ராசிகளின் சனி ராகு சேர்க்கை என்பது சொந்த தொழில் செய்ய வைக்கும்
அதிலும் குறிப்பாக ராகு திசை நடந்தால் அவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடுவார்கள் மிகப்பெரிய சம்பாத்தியத்தினை அடைவார்கள் பல பேருக்கு வேலை கொடுக்கக்கூடிய முதலாளியாகவும் இருப்பார்கள் இதே கிரகச் சேர்க்கையில் சனி திசை நடக்கும் ஆனால் தொழிலில் சற்று ஏற்றத்தாழ்வுகள் இருக்குமே தவிர முழுமையாக முடக்கி விடாது இதேபோன்று துலாம் ராசியில் சனியும் ராகுவும் இணைந்து இருப்பது என்பது யோகம் தானே தவிர தோஷம் கிடையாது துலாம் ராசியில் சனிபகவான் உச்சம் பெறுகிறார் சனி உச்சம் பெற்ற நிலையில் நின்று அவரோடு ராகு அல்லது கேது இணைவது யோகம் தானே தவிர தோஷம் இல்லை இங்கும் சனி திசை என்பதைவிட ராகு திசை மிகுந்த யோக தசையாக இருக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை
அப்படியானால் சனி ராகு சேர்க்கை யில் சனி ஆட்சி வீட்டிலோ அல்லது உச்ச வீட்டில் அமர்ந்து அவரோடு ராகு இணைந்து இருப்பது யோகத்தைச் செய்யும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம் அடுத்தபடியாக சனி ஆட்சியாக இருந்தால் மட்டும்தான் யோகமா இப்படி யோசித்துப் பாருங்கள் ஆட்சி பெற்ற சனி நேர் எதிரிடையான நிலை என்பது நீசம் அல்லவா நீசம் பெற்ற சனீஸ்வரன் உடன் ராகு இணைந்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் இந்த இணைவு எந்த ராசியில் ஏற்படும் மேஷ ராசியில் மிக எளிதாக அனைவருக்கும் தெரிந்த பதில் இங்கு சனி ராகு இணைவு சனி நீசம் பெறுகிறார் உடன் ராகு இணைகிறார் இதுதான் மிகவும் கவனத்திற்கு உரிய இடம் இங்கு சனியை பற்றியும் ராகுவை பற்றியும் பிரச்சனை இல்லை இந்த கிரக சேர்க்கை வெற்றியைத் தருமா தோல்வியை தருமா என்பது செவ்வாயின் கையில் தான் இருக்கிறது எடுத்துக்காட்டாக செவ்வாய் ஆட்சி பெற்ற நிலையில் அல்லது உச்சம் பெற்ற நிலையில் நிற்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அப்போது நீச்சபங்க ராஜயோகம் கிடைத்துவிடும் அல்லவா அப்படியானால் இந்த சனி ராகு சேர்க்கை மேஷத்தில் சனி நீசம் பெற்றிருந்தாலும் நல்லதையே செய்யும் இதே கிரகச் சேர்க்கை அதே மேஷ ராசியில் ஆனால் செவ்வாய் இங்கு வக்கிரமாகவும் நீசமாகவோ நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம் இந்த சனி ராகு சேர்க்கை மேஷத்தில் மிகக்கடுமையான பலன்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்று எளிதில் நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம்
அதேபோன்று சனிக்கும் ராகுவிற்கும் முழுமையான பகை வீடு என்பது சிம்மத்தை குறிப்பிடலாம் இந்த கிரக இணைவானது சிம்ம ராசியில் ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம் இப்போது இந்த ஜாதகருக்கு சனி திசை அல்லது ராகு தசை எவ்வாறு இருக்கும் என்பதற்கு முடிவு சொல்வதற்கான அத்தனை தீர்வுகளும் சூரியனிடமே உள்ளன காரணம் சூரியன் ஆட்சி பெற்ற நிலையில் அல்லது உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் சனி ராகு இணைவு நல்ல பலனை மட்டுமே செய்யும்
இதே சூரியன் நீசம் பெற்ற நிலையில் அல்லது 6 8 12ஆம் இடங்களில் மறைவு ஸ்தானங்களில் ராகு அல்லது கேது சேர்க்கை அல்லது பார்வை பெற்று இணைவு பெற்று இருந்தால் நிச்சயமாக இந்த சனி ராகு இணைவு என்பது மிகக் கடுமையான அல்லது கொடுமையான பலன்களை ஏற்படுத்த தவறாது இதேபோன்று எல்லா ராசிகளையும் எடுத்துக்கொள்ளலாம்
இதிலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ராகு சனி இணைவில் சனிக்கு வக்கிர கதி கிடைத்திருந்தால் அது மிகப்பெரிய யோகம் தானே தவிர தோஷம் கிடையாது அதேபோன்று பரிவர்த்தனை யோகம் கிடைத்திருந்தால் அவர்களும் வாழ்க்கையில் மிக நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் இவ்வளவு பலனையும் படித்து ஆகிவிட்டது அல்லவா? இப்பொழுது முக்கியமான விஷயம்
எந்த ராசியில் இந்த கிரக சேர்க்கை இருந்தாலும் ராகு திசை அல்லது சனி திசை அல்லது இவர்கள் இருவரின் நட்சத்திரங்களில் அமர்ந்திருக்கக் கூடிய கிரகங்களின் திசை நடந்தால் மட்டுமே இந்த கிரக இணைவு யோகமாகவோ அல்லது தோஷமாகவோ பேசும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும் ஒரு கிரக இணைவு அதாவது யோகம் இருக்கிறது என்பதற்காக ராஜயோகத்தை செய்துவிடாது அதற்கேற்ற தசையும் புத்தியும் வர வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது
அவ்வாறு நேரமும் காலமும் சாதகமாக வரும் பொழுது மட்டுமே இந்த கிரக இணைவுகள் யோகங்கள் மிகப் பிரமாதமாக வேலை செய்யும் எனவே உங்கள் ஜாதகத்தில் சனியும் ராகுவும் இணைந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் தொழில் ரீதியான பாதிப்பு ஏற்படும் என்றோ அல்லது பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள் சட்ட ரீதியான பிரச்சினைகள் வந்து விடும் என்று முடிவுக்கு வர வேண்டாம்
ஜோதிடம் என்பது எந்த ஒரு விஷயமும் நிலையில்லாமல் சுற்றிக்கொண்டே அல்லது நகர்ந்து கொண்டே இருக்கக்கூடிய கணக்கீடுகளை வைத்து கணிக்க கூடியதுதான் எனவே நாம் போடும் கணக்குகளை தவறுகள் வரலாமே தவிர நிச்சயமாக ஜோதிடத்தில் தவறு வரவாய்ப்பு இல்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்