ஒரு ஜாதகத்தில் 12 பாவமும் சரியாக அமைந்திருக்கிறது யோகமாக இருக்கிறது என்று நிச்சயமாக சொல்ல முடியாது அதேபோன்று 12 பாவமும் மோசமாக அமைந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது நன்மையும் தீமையும் கலந்ததுதான் வாழ்க்கை என்று சொல்கிறோம் அல்லவா அந்தவகையில் ஒரு சிலருக்கு சில பாவங்களில் மிகப் பிரமாதமான யோகத்தைச் செய்யும் சில இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த பாதிக்கப்பட்ட ராசிகள் அல்லது அதற்கான கிரக திசைகள் தன்னுடைய வாழ்நாளில் வராமல் இருந்தால் அதுதான் யோகம் எனப்படும் ஆனால் சிலருக்கு அடுத்தடுத்து வரக்கூடிய திசைகள் அனைத்துமே பிரச்சனையான திசைகளாகவே வந்து செல்லும் இப்படிப்பட்டவர்கள் தான் வாழ்க்கையை கடப்பதற்கு மிகச் சிரமப்பட்டு கொண்டிருப்பார்கள்
பொதுவாக ராசிக்கட்டத்தில் இரண்டு பாகத்திலும் பாவ கிரகங்கள் அமைந்திருந்தால் அதை பாவ கத்தரி தோஷம் என்றும் சுபகிரகங்கள் அமைந்திருந்தால் சுப கத்தரி யோகம் என்றும் ஜோதிடம் கூறுகிறது இரண்டு பாவ கிரகங்கள் ஒரு ராசியின் இரண்டு பக்கங்களிலும் அமர்ந்திருந்தால் அதாவது எடுத்துக்காட்டாக கடக ராசியில் சனியும் கன்னி ராசியில் ராகுவும் அமர்ந்திருந்தால் இந்த இரண்டுக்கும் இடையில் சிம்மராசி இருக்கிறது இங்கு சிம்ம ராசிக்கு காப்பகத்தில் தோஷம் என்று அர்த்தம் மறுதலையாக கடக ராசியில் குருவும் கன்னி ராசியில் புதன் அமைந்திருந்தால் சிம்ம ராசிக்கு சுப கத்திரி யோகம் இருக்கிறது என்று அர்த்தம் சரி இந்த சுப கத்திரி யோகம் தோஷத்திற்கும் என்ன வித்தியாசம்
சுப கத்திரி யோகம் திலுள்ள ஒரு ராசி பெரிய அளவிற்கு ஜாதகர் சிரமப்படாமல் எளிதாக அதனுடைய பலன்களை அனுபவிப்பார் எடுத்துக்காட்டாக லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சுப கத்திரி யோகம் அமைந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அதாவது லக்னத்திற்கு 9ம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் சுபகிரகங்கள் அமர்ந்திருந்தால் பத்தாம் இடத்திற்கு சுப கத்திரி யோகம் இருக்கிறது என்று அர்த்தம் இந்த ஜாதகர்கள் தொழிலுக்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெடாமல் எளிதாக வேலையில் அல்லது சுயதொழிலில் செட்டில் ஆகிவிடுவார்கள் அதேபோன்று இவர்கள் தொட்டு ஆரம்பிக்கக் கூடிய எல்லா தொழில்களும் வெற்றியை நோக்கி செல்லும் அதற்கு பெரிதாக இவர்கள் ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை இவர்களுடைய வேலை எல்லாம் ஆரம்பித்து வைப்பது மட்டும்தான் பாக்கி வேலைகள் எல்லாம் தானாகவே நடக்கும் இதேபோன்று நான்காம் இடத்திற்கு சுப கத்திரி யோகம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் மிக சிறிய வயதிலேயே பெரிய பெரிய சொத்துக்களை எல்லாம் வாங்கி விடுவார்கள் வாகன யோகம் நன்றாக அமைந்துவிடும் சிறிய வயதிலேயே வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை பெற்று விடுவார்கள் நான்காமிடம் தாய் ஸ்தானம் ஆகும் என்பதால் தாய்க்கு ஆயுள் மற்றும் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும் இது சுப கத்திரி யோகம் அதற்கான பலன் இதற்கு மறுதலையாக பாபகர்த்தாரி தோஷம் என்ன செய்யும்
பத்தாம் இடத்திற்கு பாவ கத்தரி தோஷம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் இம்மாதிரியான ஜாதகர்களுக்கு தொழில் அமைவது இல்லை ஒரு வேலையில் சென்று அமர்வதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியது வந்து விடும் மேலும் ஒரே இடத்தில் நிலையாக வேலையில் இருக்கவும் முடியாது தொடர்ந்து வேலை மாறிக்கொண்டே இருப்பார்கள் அல்லது இடமாற்றம் இருந்து கொண்டே இருக்கும் நிலை இல்லாத வேலையில் இருப்பார்கள் திருப்தி இல்லாத வேலையை செய்வார்கள் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் ஒருவேளை சொந்த தொழில் செய்பவராக இருந்தால் தொழில் மூலம் வரக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கும் பாதகமான தசாபுத்திகள் நடந்து கொண்டிருந்தாள் மிகப்பெரிய அளவில் தொழில் ரீதியாக சரிவுகளை சந்திப்பார்கள் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருந்தால் மிகப்பெரிய யோகத்தை அடைய முடியாது நல்ல வருமானத்தையும் தொழிலையும் கொடுத்தாலும் அதை முழுமையாக அவர்கள் அனுபவிக்க முடியாது என்பது போன்ற பலன்கள்தான் நடைபெறும் எப்படி அமைச்சராக இருப்பவர் அனுபவிப்பதை விட அவருக்கு சொந்தக்காரராக இருப்பவர்கள் அனுபவிப்பது தான் அதிகமாக இருக்கும் அதுபோன்று அவர்கள் தொழில் செய்வார்கள் பிறர் அதனால் பலன் அடைவார்கள் என்பது போன்ற பலன்கள் நடைபெறும்
ஒரு ராசிக்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் அமைந்திருப்பது அல்லது சுபகிரகங்கள் அமைந்திருப்பதால் எப்படி அந்த பாவம் பாதிக்கப்படுகிறது அதுபோல ஒரு ராசியில் பல கிரகங்கள் ஆதிபத்தியம் செலுத்தினால் அதாவது நிறைய கிரகங்கள் ஒரே ராசியை பார்ப்பது அல்லது ஒரே ராசியில் நிறைய கிரகங்கள் இணைந்து இருப்பது போன்ற கிரக சேர்க்கைகள் இருந்தால் அந்த ராசியும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு எப்படி பாவ கத்தரி தோஷம் ஒரு ராசிக்கு இரண்டு பக்கமும் நெருக்கடியைக் கொடுத்து சிரமப்பட வைக்கிறதோ அதுபோல் ஒரே ராசியில் கிரகங்கள் ஆதிபத்தியம் செலுத்துவது அந்த ராசியின் பலத்தை குறைத்துவிடும்
எடுத்துக்காட்டாக ஐந்தாமிடத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருக்கிறது அல்லது ஏதாவது ஒரு கிரகம் பார்க்கிறது என்று எடுத்துக் கொண்டால் அந்த ஸ்தானம் வலுவாக இருக்கிறது என்றால் அதற்கு பதிலாக ஐந்தாமிடத்தில் நான்கு கிரகங்கள் ஒன்றாக அமர்ந்து இருந்தாலும் அல்லது பல கிரகங்கள் 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் அந்த பாவத்தின் பலன் ரசிக்கப்படும் அதாவது ஜாதகர் எளிதாக ஐந்தாம் இடத்தின் பலனை அனுபவிக்க முடியாது இவர்களுக்கு பூர்வீகச் சொத்துக்கள் இருக்காது இருந்தாலும் அதை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் மிகுந்த காலதாமதமாக வாய்ப்பு உள்ளது ஒரு சிலருக்கு கிடைக்காமல் போய்விடலாம் இதில் பாவ கத்தரி தோஷம் சம்பந்தப்படவில்லை
பாவ கத்தரி தோஷம் என்பது ஒரு ராசிக்கு இரு பக்கமும் பாவக் கிரகங்கள் அமைய வேண்டும் ஆனால் ஒரே ராசியில் பல கிரகங்கள் சம்பந்தப் படுவது அந்த ராசியின் பலத்தை பலமடங்கு குறைந்துவிடும் இதை இப்படி சொல்வதைக் காட்டிலும் வழக்கமாக நமது ஸ்டைலில் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை அவதானிக்கவும்
இந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் இருக்கின்றன சுபகிரகங்கள் இருக்கின்றன 12-ஆம் இடத்தில் குரு இருப்பதும் அவரோடு சந்திரன் சேர்ந்து குரு சந்திர யோகம் கஜகேசரி யோகம் ஆகியவையெல்லாம் பெற்று பன்னிரண்டாம் இடத்தில் இருப்பது நல்ல ஒரே கிரகச் சேர்க்கை அதேபோன்று லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் இரண்டாம் பாவாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் நிற்பது மிகப் பிரமாதமான யோகமே ஆக இரண்டு பக்கமும் சுபகிரகங்கள் நிற்பதால் லக்கினம் சுப கத்திரி யோகம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் இந்த ஜாதகர் வாழ்க்கையை மிக எளிமையாக வாழ்ந்து விட மிகப் பெரிய சிரமங்கள் எதுவும் இவருக்கு வராது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம் ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது அவருடைய கேள்வியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்
sir... good morning..this is Senthil Kumar from Pondicherry.... I humbly request you to reply me n enlightened my life... I am a divorcee... my DOB 18/10/1979 time early morning 04 55 am.....God has blessed me with all but expected marriage life.... got married at 22 11 2015... divorced.. seven years waste.... sir I am scared o my life... one girl is a divorcee whose works with me....her name praba dob 23 07 1985 ... cuddalore.time 17.15 ... if v both enter into marriage life it will b fruitful sir .. many astrologers are confusing because of Mars position..pl guide me sir... sir v both... have tasted the extreme pain in marriage life... if these astrology matches...when our marriage will take place...sir pl. thanks in advance..
இவர் கூறியது இதுதான் திருமணம் செய்து சுமார் ஏழு வருடம் வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் அதேபோன்று திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய சிரமங்கள் எல்லாம் சந்தித்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார் இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்க முடியும் லக்கினம் சுப கத்திரி யோகத்தில் இருக்கிறதே பிறகு எதனால் இவர் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் மேலும் இன்னொரு திருமணம் செய்தால் நிம்மதி கிடைக்குமா என்றும் கேட்டிருக்கிறார் ஏன் குடும்பம் இவருக்கு இவ்வளவு கொடூரமாக அமைந்துவிட்டது சற்று ஜாதகத்தை கூர்ந்து கவனிக்கவேண்டும் லக்கினத்திற்கு இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் எனப்படும் அங்கு சூரியன் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் இணைந்து இருக்கின்றன இங்கு சூரியனுக்கு நீச்சபங்க ராஜயோகம் இருக்கிறது குடும்ப ஸ்தானாதிபதி ஆட்சிபெற்று நிலையில் இருக்கிறார் கூடவே லக்கினாதிபதியும் இருக்கிறார் அப்படியானால் குடும்ப மிகச்சிறப்பாக தானே அமைந்திருக்க வேண்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார்
இங்குதான் ஜாதகத்தை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும் லக்கினத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தை சனி 3ஆம் பார்வையாகவும் செவ்வாய் நான்காம் பார்வையாகவும் ராகு 3-ஆம் பார்வையாகவும் பார்க்கிறது ஏற்கனவே குடும்ப ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் அமர்ந்திருக்கின்றனர் இல்லாமல் மூன்று கிரகங்கள் அதை ஸ்தானத்தை பார்க்கின்றன ஆக ஆறு கிரகங்கள் இரண்டாம் இடத்தில் தொடர்பு கொள்கிறது மொத்தமுள்ள கிரகங்களே ஒன்பது தான் அதில் ஆறு கிரகங்கள் ஒரே இடத்தில் தொடர்புகொள்கின்றன. எனவே குடும்ப ஸ்தானம் மிக வலுவாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை கவனிக்கவும். ஆறு கிரகங்களில் ஐந்து கிரகங்கள் பாபகிரகங்கள் என்பதையும் மறந்துவிட கூடாது.
இதனால்தான் இந்த ஜாதகருக்கு குடும்ப ஸ்தானத்தில் மிகப் பெரிய அடி விழுந்திருக்கிறது மீண்டும் குடும்பம் என்று நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் அளவிற்கு பயந்து கொண்டுதான் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார் அதாவது மறு திருமணம் செய்தால் நன்றாக இருக்குமா என்று அந்தப் பெண்ணின் ஜாதகத்தையும் கொடுத்தே கேட்டிருக்கிறார் அந்த ஜாதகத்தையும் பார்த்து அவருக்கான பதிலையும் கொடுத்துவிடலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அடுத்ததாக இவர் திருமணம் செய்ய உத்தேசித்திருக்கும் பெண்ணின் ஜாதகம்
இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி மற்றும் நான்காம் இடத்து அதிபதியான குரு பகவானின் தசை நடந்து கொண்டிருக்கிறது அவர் நீசம் பெற்று வக்கிரம் பெற்ற நிலையில் நிற்கின்ற எனவே குருவிற்கு உச்சபலம் கிடைத்துவிடும் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் எட்டாமிடத்தில் இருக்கின்ற செவ்வாய் பாதிக்காதா என்றால் நிச்சயமாக பாதிக்க வாய்ப்பு இல்லை காரணம் ஏற்கனவே இவருக்கு திருமணம் முடிந்து டைவர்ஸ் ஆகியுள்ளது மேலும் செவ்வாயை குரு பார்ப்பதால் அடுத்த திருமணத்திற்கு ரெடியாக இருக்கிறார் உபய களஸ்திர ஸ்தானம் எனப்படும் இரண்டாவது திருமணத்தை குறிக்கக்கூடிய பதினொன்றாம் இடத்து அதிபதி சுக்கிரன் ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது ஒரு மிக நல்ல அமைப்பு ஆகும் எனவே இவருக்கு உறுதியாக மருத்துவமனையும் இந்த ஜாதகத்தை திருமணம் செய்வதால் ஒன்றும் பாதிப்பு வந்து விடாது லக்னத்துக்கு இரண்டாமிடத்து அதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் இருப்பது பெண்ணுக்கு களத்திரகாரகன் எனப்படும் கணவர் குறிக்கக்கூடிய செவ்வாய் நீசம் பெற்ற நிலையில் நின்று அதை வக்கிரம் பெற்ற குரு பார்ப்பது முதல் திருமணத்தை முடித்து வைத்துவிட்டது இரண்டாவது திருமணம் நன்றாகத்தான் இருக்கும் தாராளமாக செய்து கொள்ளலாம் தற்போது நடைபெறும் குரு திசை புதன் புத்தியில் திருமணம் வாய்ப்பே இல்லை இது முடிந்தவுடன் கேது புத்தியில் நிச்சயமாக திருமணம் முடிந்துவிடும் கேது வக்கிரம் பெற்ற குடும்ப ஸ்தானாதிபதி சனி பகவானுடன் பதினொன்றாம் இடத்தில் இருப்பது இரண்டாவது திருமணத்தை உறுதி செய்கிறது எனவே இந்த ஜாதக கேட்ட கேள்விக்கான பதில் தாராளமாக இந்த பெண்ணை மணம் செய்து கொள்ளலாம் அவருடைய கேள்விக்கும் பதில் கொடுத்தாகிவிட்டது இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பல கிரகங்கள் ஒரு பாவத்தில் சம்பந்தப்படும் பொழுது அந்த பாவம் நசிந்து விடும் என்பது மற்றும் பாவ கத்தரி தோஷத்தில் ஒரு பாவம் மாட்டும் பொழுது அந்த பாவமும் நசிந்து விடும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் இந்த ஜாதகத்தை எடுத்துக்காட்டாக கொடுத்த அந்த நண்பருக்கு மிக்க நன்றி
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்