திருமணம் ஆகி டைவர்ஸ் ஆன ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் ஏற்கனவே திருமணமான பெண்ணை பண்ணுவதா அல்லது பிரஷ்ஷாக பார்த்து பண்ணுவதா ?எது சரியாக வரும் என்று எப்படி கண்டுபிடிப்பது ?


பெரும்பாலும் திருமணம் ஆகி டைவர்ஸ் ஆனவர்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அடுத்த திருமணம் என்று போகும்போது திருமணம் ஆனவர்களை பார்த்து செய்கிறார்கள் அதாவது ஏற்கனவே திருமணமான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் ஒரு சிலர் மீண்டும் திருமணமாகாமல் பிரஷ்ஷான மாப்பிள்ளை அல்லது பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள் அப்படியானால் இரண்டாவது திருமணம் என்று போகும் போது ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது திருமணமாகாத பெண்ணை திருமணம் செய்தால் நன்றாக இருக்குமா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் இது மாதிரியான பிரச்சினைகளுக்காக தான் ஜாதகத்தை பார்க்கிறோம் எனவே ஜாதகத்தில் இதற்கான தீர்வு நிச்சயமாக இருக்கும் சரி அதை எவ்வாறு கண்டுபிடிப்பது திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்று வந்தவுடன் ஜாதகத்தில் என்ன மாதிரியான விதி எழுதப்பட்டிருக்கிறது என்று ஒவ்வொரு ஜோதிடராக எடுத்துக்கொண்டு சென்று பார்த்துக் கொண்டிருப்பார்கள் இப்படியே பார்த்து பார்த்து அவர்களும் ஒரு ஜோதிடராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு ஒருசிலர் முழுமையான ஜோதிடர் ஆகிவிடுவார்கள் இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு நல்ல டீ வேண்டும் என்றால் ஒரு நல்ல டீ கடையை பார்த்து பணம் கொஞ்சம் கூடுதலாக கொடுத்து நல்லபடியாக வாங்கி கொடுத்து குடித்துவிட்டு சென்று விடுவது என்பது அந்த பிரச்சனையை அன்றைக்கே கொடுத்து விடுவதாகவும் ஆனால் சிலர் அப்படி இருக்க மாட்டார்கள் நல்ல டீ வேண்டும் என்றவுடன் ஒரு டீக்கடை வைத்து நான் நல்ல டீ போட்டு எல்லோருக்கும் கொடுத்து நான் சாப்பிடுவேன் என்று ஆரம்பித்து விடுவார்கள் இது நடைமுறைக்கு சாத்தியப்படாது அல்லவா? இவ்வாறு கோதாவில் இறங்கும் போது தான் அவர்களும் ஜோதிடராக மாறி விடுகிறார்கள் சரி அது இருக்கட்டும் திருமணம் ஆகி டைவர்ஸ் ஆன ஒரு பையனுக்கு அடுத்த திருமணம் என்று போகும்போது ஏற்கனவே திருமணமான பெண்ணை செய்வதா அல்லது திருமணமாகாமல் பிரஷ்ஷாக இருக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாமா என்பதை எவ்வாறு எடுப்பது என்று பார்க்கலாம் இதற்கு வழக்கம் போல ஒரு எடுத்துக்காட்டு ஜாதகம் வைத்துக்கொள்வோம் இது ஒரு ஆணின் ஜாதகம் ஆகும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டது தற்போது இரண்டாவது திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இது எப்படி இருக்கும் எப்படிப்பட்ட வரன் அமையும் என்பதை கணிக்கலாம் 



குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் இரண்டாமிடத்து அதிபதி சுக்கிரன் ஆறாம் இடத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைவது முதல் திருமணத்தை முடித்து வைத்து விட்டது இரண்டாவது திருமணம் என்று செல்லும் பொழுது உபய களஸ்திர ஸ்தானம் எனப்படுவது அதாவது இரண்டாவது மனைவியை குறிக்கும் லக்கினம் என்பது 11-ஆம் இடம் ஆகும் எப்படி தந்தையை குறிப்பதற்கு ஒன்பதாம் இடத்தை பார்க்கிறோமோ அது மாதிரி தாயை குறிப்பதற்கு நான்காம் இடத்தை பார்க்கிறோமோ அதுபோல இரண்டாவது மனைவியை 11-ஆம் இடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் 


எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்ட இந்த ஜாதகத்தில் பதினொன்றாம் இடத்து அதிபதி சனி பகவான் 5-ஆம் இடத்தில் திரிகோணம் பெற்று நிற்கிறார் அவரோடு புதன் வக்கிரமாகி இணைந்திருக்கிறார் சந்திரனும் இணைந்து இருக்கிறார் இங்கு சந்திரனுக்கு பரிவர்த்தனை யோகம் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது அந்தவகையில் 5ஆம் இடத்து அதிபதி 5 ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது உபயகளத்திர ஸ்தானாதிபதி சனி இணைந்திருக்கிறார் 


இங்கு சனி வக்கிரம் பெற்ற புதன் மற்றும் மற்றும் இயற்கையில் பாப கிரகமான சூரியனுடன் இணைகிறார் சனி சூரியன் இணைவு பிரச்சனையான ஒன்று என்பதை காட்டுகிறது அது மட்டுமல்லாமல் நடக்கக்கூடிய திசை ராகு திசை ஆகும் திசாநாதன் எனப்படும் ராகு பகவான் ஆறாமிடத்தில் நிற்பது யோகம் தான் என்றாலும் அவரோடு சுக்கிரன் நீசம் அவரும் செவ்வாய் இணைந்திருப்பதும் யோகமானது அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும் இங்கு சுக்கிரன் நீசம் பெற்ற நிலையில் இருப்பதால் இவருக்கு குடும்ப அமைப்பு {குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரனாவார்}  அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்பது கவனிக்கத்தக்கது அதாவது இவருக்கு என்று ஒரு குடும்பம் அமைவது குதிரைக்கொம்பு தான் களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் நீசமாகி இருப்பதும் குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் சுக்கிரன் நீசமாக இருப்பதும் இதற்கு காரணம் 


பதினொன்றாம் இடத்து அதிபதி சனி பகவான் குருவுடன் இணைந்து இருந்தால் அல்லது குரு பார்வையில் இருந்தால் தாராளமாக திருமணம் ஆகாத பெண்ணையே திருமணம் செய்யலாம் ஆனால் இங்கு வக்கிர பெற்ற கிரகத்துடன் இணைந்து இருக்கக்கூடிய சனிபகவான் அடுத்தபடியாக சனி என்றாலே பழையது என்று தான் அர்த்தம் அப்படியானால் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் இதை திசையும் உறுதிப்படுத்துகிறது நடக்கும் குடும்ப ஸ்தானாதிபதி நீச்சம் பெற்ற அவனுடன் நிற்பதால் குறை இல்லாத குடும்பம் என்று ஒன்று அமைந்தால் நிச்சயம் பிரச்சினையாகி விடும் எனவே ஏதாவது ஒரு குறையுடன் குடும்பம் அமைந்தால்தான் அது பிரச்சனை இல்லாமல் செல்ல வாய்ப்புண்டு எனவே இந்த ஜாதகத்திற்கு ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்தால் மட்டுமே குடும்பம் அமைதியாகச் செல்லும் 


மாறாக பதினொன்றாம் இடத்து அதிபதி குரு பார்வையில் இருக்கிறார் நடக்கும் திசையும் 5ஆம் இடத்து அதிபதி அல்லது ஒன்பதாம் இடத்து அதிபதி அல்லது லக்கினாதிபதி திசை நடக்கிறது அவர்களும் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருக்கிறார்கள் 11-ஆம் இடத்து அதிபதியும் நல்ல நிலையில் இருக்கின்றார் என்றால் இரண்டாவது திருமணத்திற்கு  பெண் பார்க்கும் பொழுது திருமணமாகாத பெண் பார்த்தே செய்யலாம் ஆனால் இங்கு 11ஆம் இடம் சனி வீடு அவர் அமர்ந்திருப்பது ஐந்தாம் இடத்தில் அவருடன் வக்கிர கிரகம் சேர்ந்து அமர்ந்து இருப்பதால் இரண்டாவது தாரமாக பெண்ணை அமைத்தால்தான் குடும்பம் சரியாக இருக்கும் என்பது விதி 


கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக 


திருசிற்றம்பலம்