எட்டாம் இடத்தில் கேது செய்யும் யோகம் பொதுவாக லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது குடும்பத்தைப் பாதிக்கும் கணவன் மனைவியை பிரித்துவிடும் இரண்டு திருமணங்களுக்கு வாய்ப்புண்டு என்றெல்லாம் ஜோதிடத்தில் விதிகளாக படித்திருப்போம் ஆனால் ஒரு விதியானது அப்படியே முழுமையாக எடுத்துக்கொண்டு எல்லா ஜாதகங்களிலும் பொருத்திப் பார்த்தால் பொருந்தாமல் போவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு அதனால் தான் ஜோதிடத்தை வாழ்நாள் முழுமையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார்கள் நமது சேனலில் ஏற்கனவே எட்டாம் இடத்தில் ராகு நிற்பதால் எப்படிப்பட்ட யோகத்தைச் செய்யும் வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார்கள் என்பதை எல்லாம் எடுத்துக்காட்டு ஜாதகங்களுடன் வீடியோவாக பலமுறை பார்த்திருக்கிறோம் எனவே எட்டாம் இடத்தில் ராகு நிற்பது யோகத்தையும் கொடுக்கும் ஒரு சில நேரங்களில் பாதகமாக அமைந்து இருந்தால் தோஷத்தையும் செய்யலாம் எப்போது அது யோகத்தைச் செய்யும் எப்போது தோஷத்தை செய்யும் என்பதை கணிப்பது தான் ஜோதிடரின் திறமை அந்த வகையில் தற்பொழுது எட்டாம் இடத்தில் கேது நிற்பது ஒரு ஜாதகத்திற்கு யோகத்தை கொடுக்குமா அல்லது தோஷத்தை கொடுக்குமா என்பதை காணலாம் மற்ற எல்லா கிரகங்களையும் விட பொதுவாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகுவும் கேதுவும் பலன் செய்வதில் முன்னணியில் இருப்பார்கள் அது பாதகமான இடத்தில் நின்றால் மிகக்கடுமையான பாதகமான பலன்களையும் சாதகமான இடத்தில் நின்றால் மிகப்பெரிய யோகங்களையும் கொடுத்துவிடும் அந்த வகையில் எட்டாம் இடத்தில் நிற்கக்கூடிய ராகு அல்லது கேது யோகத்தைச் செய்வாரா தோஷத்தை செய்வாரா என்பதை எதைக்கொண்டு அறியமுடியும்? எட்டாம் இடத்து அதிபதியும் எட்டாம் இடத்தில் நிற்கக்கூடிய கேதுவிற்கு கால் கொடுத்த நட்சத்திர அதிபதியும் எந்த அளவிற்கு யோகத்தை உருவாக்குவார்கள் என்பதை ஒரு எடுத்துக்காட்டு ஜாதகத்தோடு காணலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஜாதகத்தை அவதானிக்கவும் இந்த ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் கேது அமர்ந்திருக்கிறார் கேதுவிற்கு வீடு கொடுத்த சூரியன் லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார் கேது அமர்ந்திருப்பது சுக்கிரன் சாரம் அவரும் லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் சூரியனோடு இணைந்து அமர்ந்திருக்கிறார். சூரியனுக்கும் சுக்கிரனுக்கு பகை என்பதெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை கேதுவுக்கு வீடு கொடுத்த சூரியனும் சாரம் கொடுத்த சுக்கிரனும் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளவும் லக்கினத்திற்கும் கேதுவுக்கும் இவர்கள் இருவரும் மறையாமல் இருந்தால் அது மிகப்பெரிய யோகம் ஆகும் அந்த வகையில் இந்த சூரியன் சுக்கிரன் இணைவு என்பது சிம்மத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய கேதுவிற்கு திரிகோண ஸ்தானத்தில் பலம் பெறுகிறார் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் இடமாயிற்று அது மறைவு ஸ்தானம் அல்லவா எனவே இலக்கினத்திற்கு இந்த சேர்க்கை பலமிழந்து இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா என்றால் அப்படி அல்ல 12ஆம் இடத்து அதிபதியான குரு பகவான் சுக்கிரனுடன் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் 12ஆம் இடம் பெற்ற ஒரு ஸ்தானம் ஆகிவிடுகிறது எனவே இது மறைவு ஸ்தானம் கிடையாது ஆகவே லக்கினத்திற்கும் இந்த இணைவு மறையவில்லை கேதுவுக்கும் இந்த இணைவு மறையவில்லை என்பதை கருத்தில் வைக்கவும் இப்போது இந்த ஜாதகர் என்ன செய்து கொண்டிருக்கிறார் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார் கேது தசை ஆரம்பிப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக திருமணம் முடிந்தது கேது திசையில் தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் வெளிநாட்டில் சந்தோசமாக வசித்துக் கொண்டிருக்கிறார் இவர்களுக்கிடையில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் பிணக்குகளும் ஏறவில்லை இது எவ்வாறு சாத்தியப்பட்டது கேது மேம்போக்காக பார்க்கையில் எட்டாம் இடத்தில் இருப்பதாக தெரியும் பாதகமான செயல்களைச் செய்ய தூண்டுவதாக தெரியும் ஆனால் இங்கு கேது இருப்பது மிக யோகமான ஒருநிலையில் அதனால்தான் இந்த யோகத்தைச் செய்து இருக்கிறது பொதுவாக எட்டாம் இடத்தில் கேது அல்லது ராகு அமர்ந்து விட்டாலே அந்த ஜாதகத்திற்கு திருமணம் என்று செல்லும் பொழுது நிறைய பிரச்சினைகளை அனுபவிக்க வேண்டியதிருக்கும் பெற்றவர்களுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் ஆனாலும் கவலை கொள்ள வேண்டியது இல்லை எட்டாம் இடத்தில் இருக்கக்கூடிய இந்த கிரகம் என்ன மாதிரியான பாதிப்புகளை செய்யும் அல்லது யோகத்தைச் செய்யும் என்பதை கூர்ந்து கவனித்து பொருத்தத்தில் இணைத்து வைத்தால் அவர்களுடைய வாழ்க்கை செம்மையாக இருக்கும் என்பதற்கு இந்த ஜாதகமும் ஒரு உதாரணம் கரோனா காலத்தில் அனைவரும் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்ட நேரம் எல்லோரும் வீட்டிலேயே இருந்தோமே தவிர வெளியில் எங்கும் செல்லவில்லை அரசாங்கமும் அதை அங்கீகரிக்கவில்லை உலகம் முழுமையும் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டது ஆனாலும் மருத்துவ துறை ஊழியர்கள் முன் கள பணியாளர்கள் தங்களுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டேதான் இருந்தார்கள் அவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட்டதா என்றால் நிச்சயமாக இல்லை பல லட்சம் உயிர்களை காப்பாற்றி விட்டார்கள் எப்படி நடந்தது அவர்களை கரோனா பாதிக்காதா? என்றால் அவர்களுக்கு பாதிப்பு இருந்தது ஆனால் அவர்கள் சரியான முறையில் தற்காத்துக் கொண்டார்கள் ஒருசிலருக்கு மட்டுமே உயிர் ஆபத்து வரை கொண்டு விட்டுவிட்டது எத்தனையோ மருத்துவர்கள் தனது இன்னுயிரை இழந்து விட்டார்கள் அதேபோன்றுதான் எட்டாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு அல்லது கேது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்களை செய்வதில்லை சாயா கிரகங்கள் எனப்படும் ராகு கேதுவை எட்டாம் இடத்தில் பார்த்தவுடனே திருமண வாழ்க்கை சரி இருக்காது ஜெயில் கிரகம் இருக்கிறது சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது உடல் ரீதியான தொல்லைகள் மிகவும் அவதிப்பட நேரிடும் என்பதெல்லாம் கற்பனையான பலன்களாக தான் செல்லுமே தவிர கவனித்துப் பார்க்கையில் அது யோகமாக இருக்கும் என்பதை இந்த ஜாதகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது இந்த ஜாதகத்தை எடுத்துக்காட்டுக்காக கொடுத்த அந்த நண்பருக்கும் நன்றி கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக திருச்சிற்றம்பலம்