ஒருவரை காதலித்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் ஜாதகம் எப்படி இருக்கும்
ஜோதிடத்தில் ஒரு சிலர் ஐந்தாம் இடத்தை காதல் ஸ்தானம் என்றும் வேறு சிலர் 11-ஆம் இடத்தை காதல் தானம் என்றும் குறிப்பிடுகிறார்கள் எது எப்படி இருந்தாலும் காதல் திருமணத்திற்கான கிரக நிலைகள் இருந்தாலும் எடுத்துக்காட்டாக புதனும் கேதுவும் சேர்ந்து இருந்தால் காதல் வரும் என்று ஜோதிடம் சொல்கிறது அப்படியானால் புதன் கேது சேர்ந்து இருக்கக்கூடிய அனைவரும் காதல் திருமணம்தான் செய்து கொண்டார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில் என்ன காரணம் கிரக நிலை இருப்பது மட்டும் முக்கியமல்ல அவர் அவர்களுடைய வயது காலங்களில் அதாவது திருமண காலங்களில் அந்த தசையும் புத்தியும் செயல்பட்டால்தான் காதல் வெற்றி அடையும் தோல்வி அடைவதும் நடைபெறும்
காதலைப் பொறுத்தவரை ஒருவரை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்லக்கூடிய எத்தனையோ பேரை பார்த்து இருப்போம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னால் நடந்ததை முழுதுமாக மனதில் போட்டு புதைத்து விடுவார்கள் தற்பொழுது கிடைத்து இருக்கக்கூடிய வாழ்க்கையை முழுமையாக அனுபவித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களையும் மிகச் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள் அவர்களுடைய தூக்கம் என்பது மனதின் ஆழத்தில் இருக்கும் எப்போதாவது வெளிப்படும் அதனால் ஒரு சொட்டு கண்ணீர் வேண்டுமானால் வரலாமே தவிர வேறு ஒன்றும் பிரயோஜனம் இருக்காது
வேறு சிலர் ஒருவரை காதல் செய்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு அந்தத் திருமண வாழ்க்கையை முழுதாக அனுபவிக்க முடியாமல் மனது ஒன்றாமல் தானும் கஷ்டப்பட்டு தன்னை திருமணம் செய்த வரையும் கஷ்டப்படுத்தி தன்னைச்சுற்றி எடுக்கக்கூடிய சொந்த பந்தங்களையும் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடிய நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள் காதல் தோல்விக்கு பின் திருமணம் என்று வரும் பொழுது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு புது வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்றால் மட்டுமே அதில் காலடி எடுத்து வைக்க வேண்டும் இல்லாவிட்டால் மனதில் உள்ள அந்த காயம் ஆறும் வரை காத்திருந்து பின்னர் திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்தது பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள் அல்லது சமுதாயம் வற்புறுத்துகிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திருமண வாழ்க்கைக்கு நுழைந்தாள் மனம் முழுமையாக அதில் ஈடுபடாமல் எல்லோரையும் கஷ்டப்படுத்த கூடிய ஒரு சூழ்நிலை கொண்டு சென்று விட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஏன் ஏற்படுகிறது காதல் தோல்வி ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் ஒரு எடுத்துக்காட்டுடன் காணலாம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம் ஆகும் இந்த ஜாதகத்தில் இவருக்கு திருமணம் முடிந்தது சுக்கிரன் திசை புதன் புத்தியில் திருமணத்திற்கு முன்பு இவருக்கு ஒரு காதல் இருந்துள்ளது சூழ்நிலையின் காரணமாக அந்த காதல் தோல்வி அடைந்தவுடன் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து விட்டார் ஆனால் முழுமையாக அதில் ஈடுபட முடியவில்லை எனவே எனக்கு மனம் ஒட்டவில்லை என்ற காரணம் காட்டி கணவரிடம் இருந்து பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார் இதனால் பாதிக்கப்பட்டது இந்த பெண் மட்டுமல்ல பெண்ணைப் பெற்றவர்களும் கணவர் வீட்டாரும் தான் திருமணத்திற்கு முன்னால் இது இந்த பெண்மணி சார்ந்த தனிப்பட்ட பிரச்சனை ஆனால் திருமணத்திற்குப் பின்னர் இது ஒரு குடும்பப் பிரச்சினையால் ஆகிய பலருடைய நிம்மதியையும் கெடுத்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது சரி ஏன் இந்த ஜாதகிக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என் காதல் வெற்றி பெறவில்லை
சுக்கிரன் புதன் இரண்டும் பரிவர்த்தனை யோகத்தில் தான் இருக்கிறார்கள் எனவே சுக்கிரனும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார் புதனும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார் தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிரன் திசை புதன் புத்தி புத்தி நாதன் எனப்படும் புதன் பதினொன்றாம் வீட்டு அதிபதியும் ஆகிறார் அது காதல் தான் அங்கு ஆட்சி உச்ச நிலையில் நிற்கக்கூடிய புதன் இவருடைய திருமணத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்து இருக்க வேண்டும் இவருக்கு காதல் திருமணம் ஆகியிருக்க வேண்டும் ஆனால் திருமணம் தோல்வி அடைந்ததற்கான காரணம் புதன் வக்கிரம் பெற்ற நிலையில் இருப்பதால் உச்சம் பெற்ற புதன் நீசமாகி விடுகிறார் எனவே காதல் வெற்றி பெறவில்லை
புதன் புத்தியில் வேறு ஒரு திருமணம் நடந்து அவரோடு இன்பமாக வாழ்க்கையை செலுத்த முடியவில்லை அதற்கும் இந்த புதன் தான் காரணம் அவர் வக்கிரம் பெற்ற நிலையில் இருப்பதால் அவரால் காதலை மறக்க முடியவில்லை கணவரோடு ஒட்ட முடியவில்லை மனம் ஒப்பாத வாழ்க்கையை என்னால் வாழ முடியாது என்று கூறிவிட்டு பிரிந்து சென்றுவிடுகிறார் எங்கு காதல்தானா அதிபதியான புதன் வலுவாக தானே இருக்கிறார் பரிவர்த்தனை யோகத்தில் என்றால் வக்கிரமாக இருந்திருந்தால் இந்த காதல் வெற்றி அடைந்திருக்கும் பரிவர்த்தனை இல்லாமல் இருந்திருந்தால் கணவரோடு கூடிய வாழ்க்கை அதாவது திருமண வாழ்க்கையை வெற்றி அடைந்திருக்கும் எங்கு வக்கிரம் பெற்றது காதல் தோல்வியையும் பரிவர்த்தனை பெற்றது பழைய வாழ்க்கையை மறக்கமுடியாமல் புதிய திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க முடியாமல் தவிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று வைக்க முடியாது அல்லவா எனவே இந்த ஜாதகிக்குபிரிவினை என்பது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது
காதல் ஸ்தானம் எனப்படும் பதினொன்றாம் பாவாதிபதியும் அல்லது 5-ஆம் பாவாதிபதி வக்கிரம் பெற்ற நிலையில் நின்று அவருடைய திசை அல்லது புக்தி நடக்கும்போது காதலில் தோல்வி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்
அதைவிட முக்கியமான விஷயம் மனதளவில் இன்னொரு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு குடும்பத்தை சந்தோஷமாக நடத்த முடியும் என்றால் மட்டுமே கல்யாணத்துக்கு சரி என்று சொல்ல வேண்டும் அல்லது திருமணம் தற்போதைக்கு வேண்டாம் என்று கால தாமதப்படுத்துவது பிரச்சினையோடு தொடர்புடைய அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ மனதில் வருத்தத்தை தரலாமே தவிர குடும்பத்தை பாதிக்காது இம்மாதிரியான பிரச்சினைகளில் குடும்பமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்