ஜோதிட சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்

வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரணமான ஒரு துறையாக தெரிந்தாலும் ஜோதிடம் என்பது படிக்க ஆரம்பித்து அதன் உள்ளே வந்தவர்களுக்கு தான் அதனுடைய பிரம்மாண்டம் ஓரளவுக்குப் புரியும்.  ஆர்வத்தோடு உள்ளே வந்தவர்கள் ஜோதிடத்தின் நீள அகலங்களை பார்த்து பிரமித்துப் போய் பாதியிலேயே விட்டு விடுவதும் உண்டு.

 பொதுவாக நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களையும் 12 ராசிகளையும் 27 நட்சத்திரங்களையும் தெரிந்து கொண்டாலே போதுமானது ஜோதிடம் சொல்லிவிடலாம் என்று எளிமையான எண்ணத்தோடு உள்நுழைந்த அவர்கள் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்வதும் உண்டு,  ஜோதிடத்தில் மிகவும்  தேர்ந்த அனுபவசாலி களாக இருக்கக்கூடிய பலர் முதலில் ஜோதிடத்தை குறை சொல்வதற்காகவே கற்றுக்கொள்ள முயற்சி எடுத்து இருப்பார்கள் காலப்போக்கில் ஜோதிடத்தை குற்றம் காண்பதற்காக வந்தவர்கள் உண்மை தன்மையை அறிந்து தேர்ந்த ஜோதிடர்கள் ஆகிவிடுவதும் உண்டு 


ஜோதிடம் பலருக்கும் ஆர்வத்தை கொடுக்கக்கூடிய ஒரு துறையாக இருந்தாலும், 


#அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஜோதிடத்தில் நாமும் அதை தெரிந்து கொள்வோமே என்ற ஆர்வத்தில் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளமுயற்சி மேற்கொள்ளலாமா? 

#  ஜோதிடம் படிப்பது குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்குமா?

#  ஜோதிடம் படித்தாலோ அல்லது தொழிலாக செய்தாலும் இரண்டு மனைவி அமையும் என்ற கருத்து உண்மையா?

# உலகுக்கே வழிகாட்டக்கூடிய ஜோதிடர்கள் தன்னுடைய சுய வாழ்க்கையில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் சாதிக்காமல் இருப்பது ஏன்?

# ஜோதிடத்தை ஆர்வலராக மட்டுமே இருந்து தெரிந்து கொள்ள புரிந்துகொள்ள முடியுமா?  

# ஜோதிடத்தை தொழிலாக எடுத்து செய்ய முடியுமா?   

#  ஜோதிடம் பிறரை ஏமாற்றக் கூடிய ஒரு துறையா?

# ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல எங்கிருந்து ஆரம்பிப்பது? 


என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நமது ஆன்லைன் மீட்டிங் நடைபெறும். 

 உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம்போல நமது மொபைல் செயலி மற்றும் வெப்சைட்டில் ஸ்பெஷல் வீடியோ பகுதியில் கொடுக்கப்படும்  என்ட்ரி டிக்கெட் வழியாக  மீட்டிங்கில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி நமது மொபைல் செயலி, மற்றும் வெப்சைட்டில் அஸ்ட்ராலஜி வீடியோ பகுதியில் மற்றும் ஸ்பெஷல் வீடியோ பகுதியிலும் அனைவரும் காணும் விதமாக ஒளிபரப்பாகும். உறுப்பினர் இல்லாமல் இருப்பவர்களும் காணலாம்.  

இந்த ஆன்லைன் மீட்டிங் YouTube - ல் நேரலையாக ஒளிபரப்பு ஆகாது. 


தலைப்பு:   ஜோதிடம் கடினமான பாதையா?  (Discussion with Members in Zoom)

நாள்:             டிசம்பர் 10 / 2021  வெள்ளிக்கிழமை 

நேரம்:          08.00 PM IST

இடம்:            உறுப்பினர்கள் நேரடியாக ஜும்  மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் 

உறுப்பினர் இல்லாமல் இருப்பவர்கள் மொபைல் செயலி  மற்றும் வெப்சைட்டில் அஸ்ட்ராலஜி வீடியோ பகுதியில் ஜும் மீட்டிங் போல்டரில் காணலாம். ( Live will not be available in YouTube!


Subject:      Is astrology arduous path?  ஜோதிடம் கடினமான பாதையா?

Date:          DCE 10 / 2021 Friday

Time:         08.00 PM IST

Place:        Zoom for Members Only  |  (Live will not be available in YouTube, 

NonMembers can watch the event in mobile app and website www.astrochinnaraj.net)

Live Event available in astrochinnaraj mobile app./Astrology Videos/ Zoom Meeting 

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக

திருச்சிற்றம்பலம்